Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ஒரு அப்பிரண்டீஸ் கேப்டன்.. இன்னும் நிறைய கத்துக்கணும்.. கெளதம் கம்பீர் சாட்டையடி விமர்சனம்!!

Recommended Video

IPL 2019: Gambhir slams Kohli | கோஹ்லிக்கு கெளதம் கம்பீர் சாட்டையடி விமர்சனம்!!- வீடியோ

பெங்களூர் : விராட் கோலியின் தலைமையில் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

கோலி மற்ற வீரர்களை தவறுக்கு காரணம் என கூறினாலும், கோலி ரசிகர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் கோலியின் கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம் என கூறி வருகின்றனர். முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தொடர்ந்து கோலியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தற்போது இன்னும் கீழே இறங்கி கோலியை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.

அப்பிரண்டீஸ்

அப்பிரண்டீஸ்

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ள கம்பீர், "விராட் கோலி என்ற பேட்ஸ்மேன் முழுமையான மாஸ்டர். ஆனால், விராட் கோலி என்ற கேப்டன் ஒரு அப்பிரண்டீஸ். அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு அவரே குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.

நேரடித் தாக்குதல்

நேரடித் தாக்குதல்

இதுவரை கோலியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தாலும், இப்படி நேரடியாக தாக்கிப் பேசியதில்லை. அதிலும், அப்பிரண்டீஸ் என்றெல்லாம் கோலியை யாரும் கூறிவிட மாட்டார்கள். ஆனால், கம்பீர் தெளிவாக கோலியை குறிவைத்து விமர்சித்துள்ளார்.

தொடருக்கு முன்பே விமர்சனம்

தொடருக்கு முன்பே விமர்சனம்

ஐபிஎல் தொடருக்கு முன்பே கோலி வெற்றி பெற்றுக் கொடுக்காமல், எப்படி தான் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருக்கிறாரோ? என விமர்சித்து இருந்தார். அதன்படியே இப்போது கோலி முதல் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவறுகள் தொடங்கியது எங்கே?

தவறுகள் தொடங்கியது எங்கே?

பெங்களூர் அணியின் தவறுகள் எங்கே தொடங்கியது என்பது குறித்தும் அந்த கட்டுரையில் எழுதியுள்ள கம்பீர், "கடந்த வருட ஏலத்தில் அவர்கள் சொதப்பியதில் இருந்து நான் தொடங்குகிறேன். மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கோல்டர்நைல் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று தெரிந்தும் அவர்களை ஏன் வாங்கினார்கள்?" என்று கேட்டுள்ளார்.

யாரை வாங்க வேண்டும்?

யாரை வாங்க வேண்டும்?

மேலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற ஆல்ரவுண்டரை வாங்கியதில் உள்ள தவறு ஒன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். "சின்னசுவாமி மைதானம் (பெங்களூர் அணியின் மைதானம்) போன்ற சிறிய மைதானத்தில், ஆடுகளம் தட்டையாக இருக்கும் நிலையில், நான் முழுமையான வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்து இருப்பேன்" என கூறியுள்ளார்.

Story first published: Monday, April 8, 2019, 10:14 [IST]
Other articles published on Apr 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+