கோலி மன உளைச்சலில் இருக்கிறார்.. ஐபிஎல் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுங்க!
Recommended Video

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2௦19 ஐபிஎல் தொடரின் முதல் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால், அந்த அணியின் கேப்டன் கோலி மன உளைச்சலில் இருக்கிறார்.
தோல்விக்கு கோலிதான் முக்கிய காரணம் என குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகிறது. கெளதம் கம்பீர் கோலியின் கேப்டன்சியை மிகக் கடுமையாக சாடி இருந்தார்.

தொடர் தோல்விகள் நல்லதல்ல
அடுத்த மாதம் உலகக்கோப்பை வரவுள்ளதால் இந்திய அணி கேப்டன் கோலி தொடர் தோல்விகளில் பாதிக்கபட்டு வருவது நல்லதல்ல. அவருக்கு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

மைக்கேல் வான் பதிவு
இந்த விஷயத்தை முதலில் தொடங்கி வைத்தது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். "இந்தியா சாமர்த்தியமாக இருந்தால், விராட் கோலிக்கு உலகக்கோப்பைக்கு முன் ஓய்வு கொடுப்பார்கள்." என அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

ஓய்வளிக்க வேண்டும்
அதை ரசிகர்கள் பலரும் ஏற்றுக் கொண்டு கோலிக்கு ஓய்வளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். சிலர் பெங்களூர் அணி கோலியை கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

உற்று நோக்குமா பிசிசிஐ?
ஐபிஎல் தொடர் தோல்விகளால் இந்திய அணியின் கேப்டன் மன உளைச்சலுக்கு ஆளானால், அது இந்திய அணியை பாதிக்கும் என்பது உண்மையே. அதே சமயம், கோலியில் கேப்டன்சி மீது வலுத்து வரும் எதிர்ப்புகளையும் உற்று நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிசிசிஐ.

கேப்டன் மாற்றமா?
சில ரசிகர்கள் உலகக்கோப்பை அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்கு முன் கேப்டனை மாற்றுமா இந்திய அணி? அல்லது கோலிக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு அளிக்க வலியுறுத்தப்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications