Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs DC: பிளேயிங் 11.. டாஸில் தோற்ற ஆர்சிபி கேப்டன்.. டெல்லி எடுத்த முடிவு என்ன?

பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 24வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் பின்னர் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேசுகையில், தான் ஏன் நான்கு ஓவர்கள் வீசுவதில்லை என்பதற்கு விளக்கம் அளித்தார். தனது விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் தான் அதிக ஓவர்களை வீசுவதில்லை என்றார். சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் பந்து வீச போவதாகவும் தெரிவித்தார். ஃபாஃப் டு பிளெசிஸ் மீண்டும் அணிக்குள் வந்து இருப்பதாகவும், அதனால் சமீர் ரிஸ்வி அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், கே.எல். ராகுல் முதல் இன்னிங்ஸில் தனது பேட்டிங் வரிசையில் மாற்றிக் கொள்வார் என்றும் கூறினார்.

RCB vs DC IPL 2025 Match Playing XI and Toss Faf du Plessis came in

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசுகையில், தான் டாஸ் வென்று இருந்தாலும் பந்துவீச்சை தான் தேர்வு செய்து இருப்பேன் என்றார். "இந்த பிட்ச் மிகவும் கடினமாக இருக்கிறது. அதிக ரன்களை நாங்கள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு அதை தற்காத்து விளையாட வேண்டும். சொந்த மைதானத்தில் விளையாடும் போட்டிகள் மிகவும் முக்கியமானது" என்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அணிகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்):

பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா (வி.கீ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (இம்பாக்ட் வீரர்கள்):

சுயாஷ் ஷர்மா, ரசிக் தர் சலாம், மனோஜ் பண்டகே, ஜேக்கப் பெத்தெல், ஸ்வப்னில் சிங்

டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் லெவன்):

ஃபாஃப் டு பிளெசி, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (வி.கீ), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்

டெல்லி கேப்பிடல்ஸ் (இம்பாக்ட் வீரர்கள்):
அபிஷேக் போரெல், தர்ஷன் நல்கண்டே, கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரேரா

Story first published: Thursday, April 10, 2025, 19:21 [IST]
Other articles published on Apr 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+