Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு 2 வாய்ப்பு கிடைச்சது.. ஆனா கோட்டை விட்டுட்டோமே.. புலம்பித் தள்ளிய கோலி!! #RCBvsDC

Recommended Video

என்ன ஆச்சு பெங்களூரு அணியினருக்கு ? டெல்லியிடமும் தோல்வி

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2019 ஐபிஎல் தொடரில் தன் முதல் ஆறு போட்டிகளை தோற்று மோசமான நிலைமையில் இருக்கிறது.

1
45896

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெங்களூர். இதனால், பெங்களூர் அணி கிட்டத்தட்ட தன் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது என்றே சொல்லலாம்.

எதனால் தோற்றோம்?

எதனால் தோற்றோம்?

இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி இந்த தோல்வி குறித்து புலம்பினார். எதனால் தங்கள் அணி தோற்றது என்பது குறித்தும் கூறினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 149 ரன்கள் எடுத்தது.

இன்னும் 25-30 ரன்கள்

இன்னும் 25-30 ரன்கள்

இது குறித்து பேசிய கோலி, நாங்கள் இன்னும் 25-30 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். குறைந்தது 160 ரன்களாவது வந்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தோம் என்றார்.

நழுவிய கேட்ச்

நழுவிய கேட்ச்

டெல்லி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த 67 ரன்கள்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் அடித்து இருந்த போது முதல் ஓவரில் ஒரு கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை பிடிக்காமல் நழுவ விட்டார் பார்த்திவ் பட்டேல்.

கடைசி நேர தடுமாற்றம்

கடைசி நேர தடுமாற்றம்

அதே போல, கடைசி நேரத்தில் டெல்லி அணி திடீரென வெற்றிக்கு அருகே வந்த பின் 3 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. டெல்லி அணி வெற்றி பெற 18 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே வேண்டும் என்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், ரிஷப் பண்ட் வரிசையாக ஆட்டமிழந்தனர். எனினும், அதிக பந்துகள் இருந்ததால், டெல்லி அணி சமாளித்து வெற்றிக் கோட்டை தொட்டது.

கோலி புலம்பல்

கோலி புலம்பல்

இது குறித்து பேசும் போது, "டி20 போட்டிகளில் அதிக வாய்ப்புகள் கிடைக்காது. எங்களுக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது. ஸ்ரேயாஸ் 67 ரன்கள் அடித்தார். ஆனால் 4 ரன்னில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டோம். அது போட்டியை வேறு மாதிரி மாற்றிவிட்டது. கடைசி நேரத்தில் அவர்கள் பதற்றத்தில் விக்கெட்களை இழந்தார்கள். நாங்கள் இன்னும் 25-30 ரன்கள் சேர்த்திருந்தால், அந்த சந்தர்ப்பத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்" என கோலி புலம்பித் தள்ளினார்.

இப்ப புலம்பி என்ன பண்றது? எல்லாம் முடிஞ்சு போச்சு!!

Story first published: Sunday, April 7, 2019, 23:20 [IST]
Other articles published on Apr 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+