Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs DC: 200 ரன் இல்லைனா கூட பரவாயில்லை.. ஆர்சிபி மானத்தை காப்பாற்றிய டிம் டேவிட்.. திணறல் ஆட்டம்

பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எளிதாக பவுண்டரிகளை அடிக்கலாம் எனும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெஸ்ட் போட்டி போல ஆடி சொதப்பியது.

பெங்களூரில் 200 ரன்கள் எடுப்பது எளிது எனும் நிலையில் 150 ரன்களை தாண்டுமா என்ற நிலையில் தான் இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம். டிம் டேவிட் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக ஆடி அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எடுக்க காரணமாக இருந்தார்.

RCB vs DC Tim David help Royal Challengers Bengaluru score 163 runs

இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை ஆடினார்கள்.

பிலிப் சால்ட் 17 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். நான்கு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 30 ரன்கள் சேர்த்தது பெங்களூர் அணி. ஆனால் அடுத்த ஓவரில் பிலிப் சால்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அங்கிருந்து அந்த அணியின் சரிவு துவங்கியது.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் விராட் கோலி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்கள், ஜிதேஷ் சர்மா 3 ரன்கள், கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்கள், க்ருனால் பாண்டியா 18 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தனர்.

விக்கெட் வீழ்ச்சியால் இடையே பவுண்டரி அடிக்கும் வேகமும் சரிந்தது. கடைசி கட்டத்தில் டிம் டேவிட் சற்று அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். 19வது ஓவரில் அவர் அக்ஸர் படேல் வீசிய பந்துவீச்சில் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தது.

முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் டிம் டேவிட். அந்த ஓவரில் 3 ஒய்டுகளும் வீசப்பட்டது. கடைசி ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

டிம் டேவிட் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 150 ரன்கள் தாண்டியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

Story first published: Thursday, April 10, 2025, 21:17 [IST]
Other articles published on Apr 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+