Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணியை வெளுத்து வாங்கிய சாய் சுதர்சன், ஹோல்டர்: 206 ரன்கள் இலக்கை எட்டுமா பெங்களூரு?

பெங்களூர்: ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் சதம் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். இவரது அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்களில் 205 ரன்களை குவித்துள்ளது. எனினும், பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான, சிறிய எல்லைகளை கொண்ட இந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த இந்த இமாலய இலக்கு பெங்களூரு அணியை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எகிறியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சொந்த மண்ணில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

RCB vs GT IPL 2026 Sai Sudharsan Smashes Century as Gujarat Titans Set Mammoth 206 Run Target

ஆரம்பம் முதலே இந்த ஜோடி பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை எடுத்தது. பெங்களூரு பந்துவீச்சாளர்களை ஈவு இரக்கமின்றி விளாசிய சாய் சுதர்சன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டிய அவர், வெறும் 58 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 100 ரன்களை குவித்து அசத்தினார்.

மறுமுனையில் சற்று நிதானமாக ஆடிய சுப்மன் கில் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.4 ஓவர்களில் 128 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.

இதன்பின் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் 15.3 வது ஓவரில் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 200 ரன்களை தாண்ட செய்தது.

ஹோல்டர் வெறும் 10 பந்துகளில் 2 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 23 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் க்ருணால் பாண்டியா 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய 1 ஓவரில் 17 ரன்கள் பறந்தது. அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது.

Story first published: Friday, April 24, 2026, 21:30 [IST]
Other articles published on Apr 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+