Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs GT: ஆர்சிபி அணிக்குள் வந்த இளம் அதிரடி மன்னன்.. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடும் சவால்!

பெங்களூர்: சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2026 தொடரின் 34-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. சிக்ஸர் மழைக்குப் பெயர் போன இந்த மைதானத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். சொந்த மண்ணில் பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தைச் செலுத்துமா அல்லது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பேசுகையில், "நாங்கள் முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளோம். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாகத் தெரிந்தாலும், ஆரம்பத்தில் பந்து சற்று மெதுவாக வர வாய்ப்புள்ளது. கடந்த சில போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு நாங்கள் வகுத்த திட்டங்கள் சரியாகச் செயல்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் காயம் காரணமாக அதிரடி வீரர் பில் சால்ட் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் ஜேக்கப் பெத்தேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" என்றார்.

RCB vs GT RCB Wins Toss Elects to Bowl First vs Gujarat Titans Rajat Patidar Ready to Challenge Gill s Men

டாஸ் இழந்தது குறித்துப் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், "இங்கு சேஸிங் செய்வது சிறந்ததுதான், இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு வருத்தமில்லை. ஆடுகளத்தின் தன்மையை ஆரம்பத்திலேயே கணித்து, ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க முயற்சிப்போம். கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் நடந்த தவறுகளை மறந்துவிட்டு, நேர்மறையான எண்ணங்களுடன் இன்று களம் இறங்குகிறோம். ஜேசன் ஹோல்டர் மற்றும் மானவ் சுதர் ஆகியோர் அணிக்குள் திரும்பியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

பிட்ச் அறிக்கையின்படி, சின்னசாமி மைதானம் எப்போதுமே அதிக ரன்கள் குவியும் இடமாகும். மைதானத்தின் எல்லைகள் 61 மற்றும் 74 மீட்டர் எனச் சிறியதாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் எளிதாகச் சிக்ஸர்களை விளாச முடியும். ஆடுகளத்தில் புற்கள் ஏதும் இல்லாததால், வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசினால் மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்த முடியும். முகமது சிராஜ், ககிசோ ரபாடா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

புள்ளிவிவரங்களின்படி, ஆட்டத்தின் நடுப்பகுதி ஓவர்களில் அதிக சிக்ஸர்களை விளாகுவதில் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் குஜராத் அணி இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்கத் தவறினால், பெங்களூரு அணியின் அதிரடியைச் சமாளிப்பது கடினம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் - பிளேயிங் 11:

சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் திவேதியா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், மானவ் சுதர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ்.

இம்பாக்ட் சப்ஸ்டிடியூட் : பிரசித் கிருஷ்ணா, அனுஜ் ராவத், கிளென் பிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, அர்ஷத் கான்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பிளேயிங் 11:

விராட் கோலி, தேதத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தார்.

இம்பாக்ட் சப்ஸ்டிடியூட் : ஜேக்கப் பெத்தேல், ஜோர்டான் காக்ஸ், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், வெங்கடேஷ் ஐயர்.

Story first published: Friday, April 24, 2026, 19:16 [IST]
Other articles published on Apr 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+