Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: விராட் கோலிக்கு நேர்ந்த கதி.. வரிசையாக வெளியேறிய வீரர்கள்.. உறைந்து போன ஆர்சிபி ரசிகர்கள்

பெங்களூர்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி இரண்டாவது ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது.

விராட் கோலி ஆட்டம் இழந்த விதத்தைப் பார்த்தும், வரிசையாக விக்கெட்கள் சரிந்ததை பார்த்தும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இருந்த தீவிரமான ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதுவரை விராட் கோலி பேட்டிங் செய்ய நின்றபோதெல்லாம் எழுந்த ஆரவாரம் முற்றிலும் அடங்கி மைதானம் எங்கும் நிசப்தம் நிலவியது.

RCB vs GT Virat Kohli s Early Dismissal and poor batting silenced the RCB Fans

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்ற அர்ஷத் கான் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அது மிகவும் சாதாரண ஒரு ஷார்ட் பிட்ச் பந்துதான். ஆனால், விராட் கோலி அதை முழு மனதுடன் அடிக்கவில்லை. அரை மனதுடன் அந்த பந்தை அடிக்க முயன்றார்.

பந்து நேராக டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் நின்று கொண்டிருந்த பிரசித் கிருஷ்ணா வசம் சென்றது. அவர் எந்தத் தவறும் செய்யாமல் வந்த பந்தை எளிதாக கேட்ச் பிடித்தார். இதை அடுத்து ஆறு பந்துகளில் 7 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதற்கு அடுத்த ஓவரிலேயே தேவ்தத் படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு பிலிப் சால்ட் 14 ரன்கள் எடுத்த நிலையிலும், கேப்டன் ரஜத் படிதார் 12 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆர்சிபி அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அதன் பின் ஜிதேஷ் சர்மா ஓரளவு ரன் சேர்த்தார். அவர் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். க்ருனால் பாண்டியா 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமிழக சுழற்பந்துவீச்சாளரான ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் அபாரமாக பந்துவீசி ஜிதேஷ் சர்மா மற்றும் க்ருனால் பாண்டியாவை தான் வீசிய 5 பந்துகள் இடைவெளியில் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் லியாம் லிவிங்க்ஸ்டன் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் அதிரடி ஆட்டம் ஆடி 18 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Story first published: Wednesday, April 2, 2025, 21:14 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+