For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முக்கிய வீரரே இல்லை”.. டாஸில் லக்னோ அணி எடுத்த ரிஸ்க்.. ஆர்சிபிக்கு இதுதான் சரியான நேரம்!!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணிக்கு தொடக்கமே பின்னடைவாக சென்றுள்ளது.

Recommended Video

Royal Challengers Bangalore அணி Qualifier 2-க்கு தகுதி! LSG ஏமாற்றம் | #Cricket

இரு அணிகளும் மோதும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

மழை காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 லக்னோ அணி மாற்றம்

லக்னோ அணி மாற்றம்

தனது முதல் சீசனிலேயே ப்ளே ஆஃப் வரை சென்றுள்ள லக்னோ அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட வேண்டும் என 2 முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதாவது முக்கிய வீரரான ஜேசன் ஹோல்டரையும், கிருஷ்ணப்பா கவுதமையும் கழட்டிவிட்டுள்ளது. லோயர் ஆர்டர் பேட்டிங்கில் ஹோல்டர் முக்கிய பங்கு வகிப்பார். ஆனால் அவரை நீக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மாற்றாக க்ருணால் பாண்ட்யா மற்றும் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

சரியான முடிவா

சரியான முடிவா

ஈடன் கார்டன் மைதானம் ஒரு நல்ல பேட்டிங் டிராக் ஆகும். இந்த களத்தில் தற்போது மழை பெய்துள்ளதால், ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைக்கும். இதே போல இலக்கு என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போன்று தொடக்கத்தில் இருந்தே போட்டியை கட்டமைக்கலாம். கே.எல்.ராகுலும் இதே காரணத்தை தான் கூறினார். எனினும் இந்த களத்தில் டாஸை வைத்து வெற்றியாளரை நிர்ணயிக்க முடியாது. முதல் ப்ளே ஆஃப் போட்டியில் குஜராத் இங்கு தான் சேஸிங் செய்து வென்றது.

பலமான ஆர்சிபி அணி

பலமான ஆர்சிபி அணி

ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் தனது முழு பலத்துடன் களமிறங்கியுள்ளது. ஓப்பனிங்கில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டார். அவருக்கு துணையாக டூப்ளசிஸ் உள்ளார். இவர்களை தவிர்த்து மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளனர். பவுலிங்கில் முழு நம்பிக்கையையும் முகமது சிராஜ் மீது வைப்பதாக டூப்ளசிஸே கூறியுள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஆர்சிபி அணி : டூப்ளசிஸ், விராட் கோலி, ராஜத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சபாஷ் அகமது, வானிண்டு அசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜோஸ் ஹாசல்வுட், முகமது சிராஜ்

லக்னோ அணி : குயிண்டன் டிக்காக், கே.எல்.ராகுல், எவின் லீவிஸ், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, மன்னன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மோஷின் கான், ஆவேஷ் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னாய்

Story first published: Wednesday, May 25, 2022, 20:50 [IST]
Other articles published on May 25, 2022
English summary
RCB vs LSG Eliminator match ( லக்னோ vs ஆர்சிபி ஐபிஎல் போட்டி ) ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி பெரும் ரிஸ்க் எடுத்துள்ளது. ஆர்சிபிக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X