பயிற்சிகள் முற்றிலும் ரத்து.. லக்னோவுக்கு கம்பீர் தந்த ஸ்பெஷல் ட்ரெய்னிங்..ஆர்சிபியை வீழ்த்த வியூகம்
கொல்கத்தா: ஆர்சிபி அணியை வீழ்த்துவதற்காக லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் கடைசி நேரத்தில் சிறப்பு வகுப்பு எடுத்துள்ளார்.
இரு அணிகளும் மோதும் ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு செல்ல துடிக்கும் லக்னோ அணி ஒருபுறம், இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என ஆர்சிபி அணி மறுபுறம் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லக்னோவின் நிலைமை
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் யாராலும் அசைக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் தொடரின் மத்தியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் தொடர் தோல்விகளை சந்திக்க நேரிட்டது. கடைசியாக ஆடிய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கூட 2 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த போட்டியில் அந்த அணி சற்று பலவீனமாகவே உள்ளது.

கம்பீர் அட்வைஸ்
இந்நிலையில் லக்னோ அணி வீரர்களுக்கு கம்பீர் ஸ்பெஷல் வகுப்பு எடுத்துள்ளார். போட்டிக்கு முன்னதாக ஓய்வறையில் மீட்டிங் ஏற்பாடு செய்த அவர், " லக்னோ அணி ஒன்றும் நிறைய திறமைசாலிகள் கொண்ட அணி இல்லை. பலமான அணியும் இல்லை. ஆனால் இந்த அணியால் எப்படிப்பட்ட அழுத்தமான சூழலையும் சமாளிக்க முடியும். அதுவே நமது பலம். பயிற்சிகள்

என்ன வியூகம்
எதிரணியை வீழ்த்துவதற்கு ஒரே ஆயுதம் நாம் அனைவரும் ஒரே பாதையில் சிந்திக்க வேண்டும். அணியின் 11 வீரர்களும் ஒரே மாதிரியான சிந்தனையுடன் பேசிவைத்து செயல்பட்டால், ஆர்சிபி என்ன செய்தாலும், அதை உடைக்க முடியாது. வெற்றி தானாக நமது பக்கம் வந்து சேரும் என வியூகம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

பயிற்சி ரத்து
இதுஒருபுறம் இருக்க, இந்த முக்கிய போட்டிக்காக லக்னோ அணி எந்தவித பயிற்சியும் எடுக்கவில்லை. கொல்கத்தாவில் இன்று காலை சற்று மழை பெய்ததால் பயிற்சி முகாம் ரத்தானது. இதனால் லீக் சுற்றில் இருந்த அதே பயிற்சிகள் மற்றும் நம்பிக்கையுடன் இன்று களமிறங்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications