For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸின் போதே மழை.. ஆர்சிபி vs லக்னோ போட்டி தடையின்றி நடக்குமா..கொல்கத்தா வானிலை அறிக்கை கூறுவது என்ன

கொல்கத்தா: ஆர்சிபி vs லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இரு அணிகளும் மோதும் ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

புதிதாக வந்துள்ள லக்னோ அணி மற்றும் ஆர்சிபியின் 15 ஆண்டுகளாக கோப்பை கனவு என இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

இந்நிலையில் தான் போட்டி நடைபெறுமா என்பதிலேயே சந்தேகம் உருவாகியுள்ளது. ஏனென்றால் இரு அணி கேப்டன்களும் டாஸ் போடுவதற்கு புறப்படும் நேரத்தில் மழைக் குறுக்கிட்டுவிட்டது. இதனால் டாஸ் போடுவதே தள்ளிப்போனது. முதலில் தூறல் மழை பெய்த சூழலில் சிறிது நேரத்திலேயே கன மழை பெய்ய தொடங்கிவிட்டது.

 மூடப்பட்ட பிட்ச்

மூடப்பட்ட பிட்ச்

இதனையடுத்து மைதானம் முழுவதும் கவர் செய்யப்பட்டுவிட்டது. போட்டியில் மழையின் குறுக்கீடு பெரிதாக இருக்காது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறிய சூழலில், மழையின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க முடியாதா என ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

 போட்டி நடைபெறுமா?

போட்டி நடைபெறுமா?

ஆனால் நிச்சயம் கோலியின் ஆட்டம் இன்று இருக்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால் மைதானத்தில் மழைக்கு நிகராக அதிகப்படியாக காற்று வீசி வருகிறது. தொடக்கத்தில் சற்று குறைவாக இருந்த காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால், மழை நீண்ட நேரம் நீடிக்காது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். 20 ஓவர்களும் முழுவதுமாக வீசப்படும் என்றும் தெரிகிறது.

Recommended Video

Royal Challengers Bangalore அணி Qualifier 2-க்கு தகுதி! LSG ஏமாற்றம் | #Cricket
 அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

இது ஒருபுறம் இருக்க, கொல்கத்தா நகரத்தில் இன்று காலை முதலே அவ்வப்போது மழைப்பொழிவு இருந்துள்ளது. லக்னோ மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுமே தங்களது பயிற்சி முகாம்களை ரத்து செய்துள்ளனர். லீக் சுற்றுக்கு எடுத்த பயிற்சியுடன் தான் தற்போது களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 25, 2022, 20:46 [IST]
Other articles published on May 25, 2022
English summary
RCB vs LSG Match Rain ( ஆர்சிபி vs லக்னோ போட்டி வானிலை ) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மழைக்குறுக்கிட்டதால் ஆர்சிபி vs லக்னோ போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+