IPL: ஆர்சிபி பிளேயிங் 11இல் கோலி இல்லை.. ஆனால் ஒரு ட்விஸ்ட் வைத்த நிர்வாகம்.. பேட்டிங் செய்வாரா?
பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டிக்கான ஆர்சிபி அணியின் பிளேயிங் 11-இல் விராட் கோலி சேர்க்கப்படவில்லை.
பெங்களூரு மைதானம் பொதுவாகவே சிறியது என்பதால், இங்கு ரன் வேட்டை அதிகமாக இருக்கும். அத்துடன் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய படிதார், "இங்கு முதலில் பந்துவீசுவது என்பது மிகவும் வெளிப்படையான முடிவு தான். மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.

கோலிக்கு காயம்
இந்தப் போட்டியின் தொடக்க வீரர்களின் பட்டியலில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கோலியின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்யமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யும் போது, அவர் 'இம்பாக்ட் பிளேயராக' களம் இறங்கி அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணி மாற்றங்கள்
பெங்களூரு அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேக்கப் டஃபிக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணிக்குள் திரும்பியுள்ளார். இது பெங்களூரு அணியின் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும். மறுபுறம் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் அந்த அணி களம் இறங்குகிறது.
விளையாடும் வீரர்கள் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆடும் 11: பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ரசிக் தார், ஜோஷ் ஹேசில்வுட்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆடும் 11: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், முகுல் சவுத்ரி, முகமது ஷமி, ஆவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி, பிரின்ஸ் யாதவ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: மணிமரன் சித்தார்த், ஜார்ஜ் லிண்டே, மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், மயங்க் யாதவ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் வீரர்கள்: விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர், ஜோர்டான் காக்ஸ், கனிஷ்க் சவுகான், மங்கேஷ் யாதவ்


Click it and Unblock the Notifications