Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Memes: "என்ன சின்னச்சாமி.. ஹோம் கிரவுண்டில் ஹாட்ரிக் சம்பவம் போல" ஆர்சிபியை வெளுக்கும் மீம்ஸ்!

பெங்களூர்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் தொடர்ந்து 3வது தோல்வியை ஆர்சிபி அணி அடைந்திருக்கும் நிலையில், சோசியல் மீடியாவில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.

தேசிங்குராஜா படத்தில் ரவி மரியாவை பார்த்து சிங்கம் புலி, "ஐயோ.. ஃபேர் அண்ட் லைவ்லி போட்ட அண்ணாச்சி.. உங்களுக்கு "பம்"மு வராதா" என்று சொல்வார். அதில் ரவி மரியாவை ஆர்சிபி அணியாகவும், சிங்கம் புலியை ரசிகர்களாகவும் மாற்றி, "ஐயோ ஆர்சிபி அண்ணாச்சி.. உங்களுக்கு சொந்த மைதானத்தில் ஜெயிக்க வராதா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ipl 2025 memes RCB vs PBKS Virat Kohli

தமிழ்ப் படத்தின் முதல் பாகத்தில், கந்தசாமியை பார்த்து டூப்பு ரகுவரன் கதாபாத்திரம் "ஆள விடுறா சாமி" என்று ஓடுவார். அதனை அப்படியே கந்தசாமியாக சின்னச்சாமி மைதானத்தையும், ரகுவரன் டூப்பாக ஆர்சிபி அணியையும் மாற்றி, "ஆள விடுடா சாமி" என்று ஓடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுறா கொய்யால மொமண்ட்.

வசூல்ராஜா படத்தில் ஜூனியர் சாமிநாதன் சீனியர்களிடம் சென்று, எக்ஸ்யூஸ் மீ.. ரூம் சேஞ்ச் பண்றதுக்கு என்ன செய்யணும் என்று கேட்பார். அதில் வரும் சீனியராக பிசிசிஐயையும், ஜூனியராக ஆர்சிபி அணியையும் மாற்றி, எக்ஸ்யூஸ் மீ.. ஹோம் கிரவுண்ட் மாற்றம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டினடா பம்பரைக்கட்ட மண்டையா மொமண்ட்.

ipl 2025 memes RCB vs PBKS Virat Kohli

அரசு படத்தில் சரத்குமாரை சந்திக்கும் வடிவேலு, "பேசாம கோயில்ல மணியே அடிச்சிட்டு இருந்திருக்கலாம் திருநா.. அது ஜாப்பு இல்லப்பா.. எனக்கு நானே வச்சிக்கிட்ட ஆப்பு" என்று சொல்வார். இதில் வரும் வடிவேலுவை ஆர்சிபி அணியை மாற்றி, "இதுக்கு பேசாம மழையே வந்து இருக்கலாம் திருநா.. இது மேட்ச் இல்ல.. எனக்கு நானே வச்சிக்கிட்ட ஆப்பு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் மொமண்ட்.

ipl 2025 memes RCB vs PBKS Virat Kohli

விருமாண்டி படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் சண்முகராஜா விசாரணைக்காக வரும் போது, "என்ன கோட்டைச்சாமி" என்று கேட்பார். அப்போது அடிப்பட்டவருக்கு ஒரு பக்கம் ரத்தம் வழியும்.. அதில் வரும் சண்முகராஜாவை ஸ்ரேயாஸ் ஐயராக மாற்றி, "என்ன சின்னச்சாமி.." என்று நக்கல் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னை காப்பாத்துங்க மொமண்ட்.

ipl 2025 memes RCB vs PBKS Virat Kohli
ipl 2025 memes RCB vs PBKS Virat Kohli
ipl 2025 memes RCB vs PBKS Virat Kohli
Story first published: Saturday, April 19, 2025, 10:49 [IST]
Other articles published on Apr 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+