Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஆட்டநாயகன்” இந்த சீனியர் செய்த ட்ரிக் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வெல்ல காரணம்

அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில், அதற்கு முக்கிய காரணமே க்ருனால் பாண்டியாவின் பந்துவீச்சுதான். அதிலும் அவர் செய்த ஒரு பவுலிங் முறை, இந்தப் போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்வதற்கு அதுவே முக்கியமான காரணமாக இருந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தனது பந்துவீச்சில் மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை அளித்த க்ருனால் பாண்டியா, நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதை அவர் எப்படி செய்தார் என்பதுதான் இந்தப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ரன்கள் சேர்க்க முயன்ற நிலையில், க்ருனால் பாண்டியா வீசிய ஓவர்களில் அவர்களால் எளிதாக ரன் சேர்க்க முடியவில்லை.

RCB vs PBKS IPL Final Krunal Pandya s Bowling is the reason for RCB win in IPL 2025 Final

ஏனெனில் ஹர்ஷல் படேல் மிகவும் மெதுவான வேகத்தில் பந்துவீசினார். மேலும், ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு வேகத்தில் இருக்கும் வகையில் அவர் வீசினார். அவர் மெதுவாக வீசியதால், ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு வேகங்களில் வீசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் போட்டி நடந்த அகமதாபாத் மைதான பிட்ச், இரண்டு வெவ்வேறு வகையில் பவுன்ஸ் ஆவதை பவுலர்கள் கணித்திருந்தனர். பொதுவாக இது போன்ற பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும். ஆனால், இதையும் தனது அனுபவத்தின் மூலம் க்ருனால் பாண்டியா தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.

அதனால்தான் அவர் வீசிய ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களால் ரன் குவிக்க முடியவில்லை. க்ருனால் பாண்டியா நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்ததுடன், பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜோஷ் இங்லிஸ் என இரண்டு டாப் ஆர்டர் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அவரே வென்றார்.

இடையே சில போட்டிகளில் க்ருனால் பாண்டியாவுக்கு முழுமையாக ஓவர்கள் வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அது அப்போது விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், எந்தப் போட்டியில் அவரை முழுமையாக பயன்படுத்த வேண்டுமோ, அந்தப் போட்டியில் அவரை முழுமையாக பயன்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. தனது அனுபவத்தையும் க்ருனால் பாண்டியா வெளிப்படுத்தி பெங்களூரு அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

Story first published: Wednesday, June 4, 2025, 6:45 [IST]
Other articles published on Jun 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+