பெங்களூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இதுவரை முடிவடைந்துள்ள 5 போட்டிகளிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றிபெற்றுள்ளதால், இன்று சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி முதல் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் பஞ்சாப் அணி தரப்பில் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

அதில் இருவரும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசிய நிலையில், சிராஜ் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் தவான் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி இணைந்து அதிரடியாக விளையாடியது. 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸ் விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இந்த நிலையில் 5வது பவுலரான மேக்ஸ்வெல்லை அட்டாக் செய்ய தீர்மானிக்கு, பிரப்சிம்ரன் சிக்ஸ் அடித்தார்.
இதன்பின் மீண்டும் அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடிக்க முயன்று 25 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் லிவிங்ஸ்டன் அதிரடியால் 11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தில் லிவிங்ஸ்டன் 17 ரன்களிலும், அடுத்த பந்திலேயே தவான் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பஞ்சாப் அணியின் பாடு திண்டாட்டமாக மாறியது. இதனால் இன்னிங்ஸை முடிக்கும் பொறுப்பு சாம் கரன் - ஜித்தேஷ் சர்மா கூட்டணியிடம் அளிக்கப்பட்டது.
ஆனால் அதிரடியாக ஆடிய சாம் கரன் 23 ரன்களில் அனுஜ் ராவத்தின் அபார கேட்ச்சால் வெளியேறினார். 18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதன்பின் சிராஜ் வீசிய பந்தில் ஜித்தேஷ் சர்மாவும் 27 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரை வீச அல்ஜாரி ஜோசப் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷஷாங்க் சிங் சிக்ஸ் அடிக்க, மீண்டும் 3வது பந்தில் சிக்சருக்கு பறந்தது. பின் 4வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, இந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.