For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனசாட்சி இருக்கா.. 43 டாட் பால்கள்.. ஒரு பூங்காவே உருவாக்கிடலாம் போலயே.. நொந்துபோன ஆர்சிபி பாய்ஸ்!

பெங்களூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்களை சேர்த்துள்ளது. இந்த இன்னிங்ஸில் ஆர்சிபி அணி மொத்தமாக 43 டாட் பால்களை ஆடி இருக்கிறது. இதனால் மும்பை மற்றும் சிஎஸ்கே அணி தரப்பில் தரப்பில் ஆர்சிபி அணி ஆடிய டாட் பால்களை மூலமாகவே ஒரு பூங்காவே உருவாக்கிவிடலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. பெங்களூரில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்ததால், ஆட்டம் திட்டமிட்டபடி 7.30 மணிக்கு தொடங்கப்படவில்லை. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 9.45 மணிக்கு வீரர்கள் பேட்டிங்கை தொடங்கினர். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

RCB vs PBKS RCB played a 43 Dot balls in a 14 Over Match against Punjab Kings at Chinnaswamy Stadium

மழையால் ஆட்டம் தாமதமாகியதால், ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதனால் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்றும், 4 ஓவர்களில் 3 ஓவர்கள் வரை வீசலாம் என்றும், 4 ஓவர்கள் மட்டுமே பவர் பிளேவாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிக்சர் மழையில் நனையத் தயாரா என்று ஆர்சிபி அணியின் ரசிகர்கள் போட்டி தொடங்குவதற்காக காத்திருந்தனர்.

ஆனால் முதல் ஓவரில் பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, 3வது ஓவரில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்தவர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, எப்படியாவது 49 ரன்களை கடந்தால் போதும் என்ற மனநிலைக்கு ஆர்சிபி அணி ரசிகர்கள் வந்தனர். ஆனால் நம்ம சிங்கப்பூர் சித்தப்பா என்று சொல்லப்படும் டிம் டேவிட், கடைசி நேரத்தில் அதிரடியில் பட்டையை கிளப்பினார்.

சிறப்பாக ஆடிய அவர் 26 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆர்சிபி அணி ஓரளவிற்கு கவுரவமான இலக்கை பெற்றதாக அந்த அணி ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனாலும் இந்த இன்னிங்ஸில் ஆர்சிபி அணி ஆடிய டாட் பால்களின் எண்ணிக்கை ரசிகர்களிடையே மிரள வைத்துள்ளது.

14 ஓவர்கள் கொண்ட போட்டியில் மொத்தமாக 43 டாட் பால்களை விளையாடி இருக்கின்றனர். அதாவது 48 சதவிகித பந்துகளை டாட் பால்களாக ஆர்சிபி அணி விளையாடி இருக்கிறது. இதனால் கார்டன் சிட்டியான பெங்களூரில் புதிய பூங்காவையே ஆர்சிபி அணி உருவாக்கலாம் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த சீசனில் ஒவ்வொரு டாட் பால்களுக்கும் பிசிசிஐ மரக்கன்றுகளை நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 18, 2025, 23:20 [IST]
Other articles published on Apr 18, 2025
English summary
RCB vs PBKS: RCB played a 43 Dot balls in a 14 Over Match against Punjab Kings at Chinnaswamy Stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+