RCB vs RR: அம்பயர் செய்த செயல்.. ஆர்சிபி மேட்ச் ஃபிக்ஸிங்? கொந்தளித்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?
அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக பிற அணிகளின் ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. 122 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் தினேஷ் கார்த்திக் களத்துக்கு வந்தார். ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவருக்கு அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார்.

அப்போது தினேஷ் கார்த்திக் ரிவ்யூ செய்தார். மூன்றாவது அம்பயர் ரீப்ளே பார்த்த போது தினேஷ் கார்த்திக் பேட்டில் பந்து படாமல் காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. எனினும், அம்பயர் அல்ட்ரா எட்ஜ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பார்த்தார். அப்போது பேட்டும், பாலும் சந்தித்துக் கொண்ட போது அல்ட்ரா எட்ஜில் சிக்னல் காட்டியது.
அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் பேட் அவரது காலிலும் சேர்த்து பட்டது. அதனால் தான் அல்ட்ரா எட்ஜில் சிக்னல் காட்டி இருக்கிறது. ஆனால் அதை சரியாக கவனிக்காத மூன்றாவது அம்பயர் பந்து, பேட்டில் பட்டதாக கூறி எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தது தவறு என அறிவித்தார். இதை அடுத்து மூன்றாவது அம்பயரும், பெங்களூரு அணியும் சேர்ந்து மேட்ச் ஃபிக்ஸிங் செய்து விட்டதாக பிற அணிகளின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் அம்பயரின் தவறான தீர்ப்பால் ராஜஸ்தான் அணிக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பின்னர் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. பெங்களூரு அணி தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறியது.


Click it and Unblock the Notifications