Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கர்மா ஒரு பூமராங்” என நிரூபித்த ரியான் பராக்.. ராஜஸ்தான் - ஆர்சிபி போட்டியில் தரமான சம்பவம்- வீடியோ

அகமதாபாத்: கேட்ச் பிடிப்பதில் கெத்து காட்டி வந்த ரியான் பராக் இன்று ஆர்சிபி போட்டியில் பெரும் அவமானத்தை சந்தித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி சீரான இடைவெளியில் ரன்களை குவித்தது. இளம் வீரர் ரஜத் பட்டிதார் இன்றும் அரைசதம் அடித்து அசத்தினார். எனினும் இந்த போட்டியில் ஆர்சிபியின் பேட்டிங்கை தாண்டி ரியான் பராக் கேட்ச்-ஐ விட்ட முறை தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இணையத்தில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

என்ன காரணம்

என்ன காரணம்

ராஜஸ்தான் அணியில் ஃபீல்டிங் என்றால் ரியான் பராக் தான் என்ற சூழல் உள்ளது. எவ்வளவு கடினமாக இருந்தாலும் அசால்டாக பிடித்து அசத்துவார். ஆனால் அவர் கேட்ச் பிடித்தவுடன், பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பார். இதே போல ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வார். இன்னும் கிரிக்கெட்டில் எதுவுமே சாதிக்கவில்லை, ஆனால் கேட்ச் பிடிக்கிறாய் என்ற ஆணவமா? என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

தவறிய அழகான கேட்ச்

தவறிய அழகான கேட்ச்

இந்நிலையில் இன்று கைக்கு வந்த அழகான கேட்ச்சையே தவறவிட்டார். ஆட்டத்தின் 6வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை ரஜத் பட்டிதார் ஸ்ட்ரைட்டாக தூக்கி அடித்தார். அப்போது அங்கிருந்த ரியான் பராக், சுலபமாக தான் வருகிறது என்ற அலட்சியத்தால் கையை தூக்கி பிடித்துவிடலாம் என நினைத்தார். இதன் விளைவு முக்கியமான கேட்ச் தவறியது.

அலட்சியத்தியன் விளைவு என்ன அலட்சியத்தியன் விளைவு என்ன

அலட்சியத்தியன் விளைவு என்ன அலட்சியத்தியன் விளைவு என்ன

ஆர்சிபி அணியில் விராட் கோலி, டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் என முக்கிய வீரர்கள் அனைவருமே ஏமாற்றினர். ரஜத் பட்டிதார் மட்டும் தான் அரைசதம் அடித்தார். ரியான் பராக்கின் இந்த அலட்சியம், 14 ரன்களுக்கு அவுட்டாக வேண்டிய ரஜத் பட்டிதாரை அரைசதம் அடிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 27, 2022, 21:39 [IST]
Other articles published on May 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+