பெங்களூர்: ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ர ராஜஸ்தான் அணியின் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக களமிறங்காததால், அவரது பதிலாக ரியான் பராக் கேப்டன்சியை ஏற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்பாக சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி டாஸில் தோல்வி அடைந்திருந்தது. தற்போது 4வது முறையாக டாஸில் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி ஆர்சிபி அணி பேட்டிங் செய்கிறது.
அதேபோல் இந்த சீசனில் சின்னச்சாமி மைதானத்தில் ஆடிய 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் இதுவரை வெல்லாத ஒரே அணி பெங்களூர் மட்டும்தான். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசுகையில், நாங்கள் முதல் பவுலிங்கை செய்கிறோம்.
இந்த பிட்சில் பந்து நின்று வரும் என்று நினைக்கிறேன். பேட்டிங் விளையாடுவதற்கு சில மணி நேரத்திற்கு பின் உதவியாக இருக்கும். களத்தில் 100 சதவிகிதம் திறமையை நாங்கள் இணைந்து வெளிப்படுத்தினால், முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையும். சஞ்சு சாம்சன் இன்னும் காயத்தில் இருந்து குணமடையவில்லை. நிச்சயம் விரைவில் மீண்டு வருவார். தீக்சனாவுக்கு பதிலாக ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இந்த பிட்ச் இதுவரை வித்தியாசமாகவும், கணிக்க முடியாமலும் இருந்து வருகிறது. ஷாட் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.