Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யவன்ஷிக்கு அந்த எண்ணம் மட்டும் வரக்கூடாது.. ஒரே சீசனில் காணாமல் போய்விடுவார்.. சேவாக் அட்வைஸ்!

பெங்களூர்: 14 வயதாகும் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி குறைந்தது 20 ஆண்டுகளாவது ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று வைபவ் சூர்யவன்ஷி அட்வைஸ் கொடுத்துள்ளார். விராட் கோலியை போல் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று சூர்யவன்ஷி இலக்கை கொண்டு விளையாட வேண்டும் என்று கூறிய அவர், தன்னை ஸ்டார் என்று நினைத்து கோடிகளில் சம்பாதித்தால் போதும் என்று நினைத்தால் அடுத்த ஆண்டே காணாமல் போய்விடுவார் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்கள் விளாசி அசத்தினார். புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட அவரின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி அனைத்து பந்துகளை சிக்ஸ் அடிக்க முயற்சிப்பதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

RCB vs RR Vaibhav Suryavanshi must aim for playing 20 years in the ipl says Virender Sehwag

சேவாக் அட்வைஸ்

இதனால் வரும் நாட்களில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் அடுத்தக் கட்டத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி-க்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதில் சேவாக் பேசுகையில், கிரிக்கெட்டை பொறுத்தவரை சிறப்பாக விளையாடும் போது பாராட்டுகள் வரும்.

ஸ்டார் என்ற எண்ணம்

அதேபோல் மோசமான விளையாடும் போது விமர்சனங்கள் எழும். இதன் மூலமாகவே கிரிக்கெட் வீரர்கள் சமநிலையில் இருப்பார்கள். ஐபிஎல் தொடரில் 1 அல்லது 2 போட்டிகளில் விளையாடி உச்சக்கட்ட புகழை அடைந்து, திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதன்பின் அவர்களை மீண்டும் பார்க்கவே முடியாது. அதற்கு காரணமே, அந்த வீரர்கள் தங்களின் மனதில் ஸ்டார் என்று நினைத்து கொள்வதுதான்.

விராட் கோலியை பின்பற்றுங்கள்

வைபவ் சூர்யவன்ஷியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரை குறைந்தது 20 ஆண்டுகளாவது விளையாட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும். விராட் கோலி 19 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார். இதுவரை 18 சீசன்களில் விளையாடி இருக்கிறார். விராட் கோலியை போல் நீண்ட ஆண்டுகள் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்.

கோடிகள் முக்கியமில்லை

ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதே மகிழ்ச்சி என்று நினைத்து கொண்டு, கோடிகளில் சம்பாதிப்பதே நிறைவு என்று நினைத்தால், அவ்வளவுதான். வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட முதல் பந்து சிக்சரை, அடுத்த சீசனில் யாராலும் பார்க்க முடியாது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி தன்னை ஸ்டார் என்று நினைக்காமல், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 25, 2025, 13:00 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+