Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி கேப்டன் மாற்றம்.. இம்பேக்ட் வீரராக மாறிய ரஜத் படிதார்.. ஜிதேஷ் சர்மாவுக்கு சென்ற கேப்டன்சி

லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் இந்த போட்டியில் கேப்டனாக செயல்படவில்லை. அவர் இம்பாக்ட் வீரராக மட்டுமே விளையாடினார். அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் ஃபீல்டிங் செய்ய முடியாத நிலை இருக்கிறது. எனவே, அவர் பேட்டிங் மட்டும் செய்யும் வகையில் இம்பாக்ட் வீரராக இந்த போட்டியில் பங்கேற்றார். அவருக்குப் பதிலாக ஜிதேஷ் ஷர்மா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

RCB vs SRH IPL 2025 Jitesh Sharma Captains RCB Travis Head Returns

ஜிதேஷ் டாஸ் வென்ற பின் பேசுகையில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக நான் முதன்முறையாக கேப்டனாக செயல்படுகிறேன். கடந்த ஆண்டு இதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டேன். இப்போது நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். ஆடுகளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்."

"இந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்க விரும்புகிறோம். அங்கிருந்து பிளே ஆஃப் சுற்றில் விளையாட வேண்டும் என நினைக்கிறோம். எங்கள் அணி நிர்வாகம் வீரர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது. அணியில் நல்ல சூழ்நிலை மற்றும் கலாச்சாரம் நிலவுகிறது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல நினைக்கிறோம். ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். தேவ்தத் படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்" என்றார்.

அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், "நாங்கள் கடந்த சில போட்டிகளாக நல்ல விதமாக விளையாடி வருகிறோம். அடுத்த ஆண்டுக்கான அணியை இப்போது கட்டமைத்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட வேண்டும். நாங்கள் கடந்த போட்டியில் 200 ரன்களை எளிதாக சேசிங் செய்தோம். நானும் சமியும் இணைந்து பந்துவீசுகிறோம். அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட்க்காகத் தயாராகி வருகிறோம். டிராவிஸ் ஹெட், அபிநவ் மனோகர் மற்றும் ஜெயதேவ் உணட்கட் ஆகியோர் அணிக்குத் திரும்பி இருக்கின்றனர்" என்றார்.

அணிகள்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (விளையாடும் லெவன்): பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், லுங்கி என்கிடி, சுயாஷ் ஷர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் சப்: ரஜத் படிதார், ரசிக் தர் சலாம், ஜேக்கப் பெத்தேல், மனோஜ் பண்டகே, ஸ்வப்னில் சிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (விளையாடும் லெவன்): அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேட் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், ஈஷான் மலிங்கா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பாக்ட் சப்: முகமது ஷமி, ஹர்ஷ் துபே, சச்சின் பேபி, ஜீஷன் அன்சாரி, சிமர்ஜீத் சிங்

Story first published: Friday, May 23, 2025, 19:21 [IST]
Other articles published on May 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+