For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB vs SRH: மகத்தான சாதனை நோக்கி சென்ற இசான் கிஷன்.. ஒரே கேட்சால் ஆட்டத்தையே மாற்றிய பில் சால்ட்

பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி காட்டி 38 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அவரது சதம் கனவைத் ஃபில் சால்ட்டின் ஒற்றை டிகயால் பிடித்த அபார கேட்ச் தகர்த்தது.

37 பந்துகளில் 80 ரன்களுடன் இஷான் கிஷன் களத்தில் இருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மேலும் சில ரன்களை சேர்க்கும் நோக்கத்துடன் அவர் சாமர்த்தியமான ஒரு ஷாட்டை ஆட முயன்றார். ஆனால், 16வது ஓவரின் ஆறாவது பந்தில், ஃபில் சால்ட் தனது அபார முயற்சியால் பந்தை ஒற்றைக்கையால் பறந்து பிடித்து இஷானின் அதிரடி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

முன்னதாக, 14வது ஓவரின் முதல் பந்தில் ஹென்ரிச் கிளாசனின் சர்ச்சைக்குரிய கேட்சையும் பிடித்திருந்த சால்ட், இம்முறையும் சின்னசாமி மைதானத்தில் இருந்த அனைவரையும் தனது அசாத்திய திறமையால் வியப்பில் ஆழ்த்தினார். இதன்மூலம் அபிநந்தன் சிங் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டையும், அத்துடன் ஒரு சிறந்த செட் பேட்ஸ்மேனின் விக்கெட்டையும் பெற சால்ட் உதவினார்.

IPL 2026: சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை காலி செய்த ஆர்சிபியின் ஜேக்கப் டஃபி.. பவர்பிளேவில் தடுமாற்றம்IPL 2026: சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை காலி செய்த ஆர்சிபியின் ஜேக்கப் டஃபி.. பவர்பிளேவில் தடுமாற்றம்

இஷான் கிஷனின் ஆட்டமிழப்புக்குக் காரணமான சால்ட்டின் இந்த அசாதாரண கேட்ச், மைதானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது இணையத்திலும் பெரும் வைரலாகி வருகிறது. இந்த கேட்ச் மட்டும் தவறவிடப்பட்டிருந்தால், இஷான் கிஷன் தனது முதல் ஐபிஎல் கேப்டன்சி போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற அரிய சாதனையைப் படைத்திருப்பார்.

இந்த சாதனையை இதுவரை சஞ்சு சாம்சன் மட்டுமே நிகழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தக ஒப்பந்தம் மூலம் மாறிய சாம்சன், ஐபிஎல் 2026 தொடரில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாட உள்ளார்.

IPL 2026: 18 பந்துகளில் 43 ரன்கள்.. சன்ரைசர்ஸ் ஆட்டத்தையே மாற்றிய அங்கீத் வர்மா? 3 வயதில் தாயை இழந்தவர்IPL 2026: 18 பந்துகளில் 43 ரன்கள்.. சன்ரைசர்ஸ் ஆட்டத்தையே மாற்றிய அங்கீத் வர்மா? 3 வயதில் தாயை இழந்தவர்

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் களமிறங்கிய சாம்சன் சதம் அடித்தார். 222 ரன்கள் துரத்தப்பட்ட அந்த ஆட்டத்தில், அவர் வெறும் 63 பந்துகளில் 119 ரன்கள் விளாசி தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்தார்.

Story first published: Saturday, March 28, 2026, 23:01 [IST]
Other articles published on Mar 28, 2026
English summary
Ishan Kishan struck 80 off 38, guiding Sunrisers Hyderabad in a tense IPL 2026 match against Royal Challengers Bangalore. Phil Salt produced a remarkable one handed catch to dismiss Kishan, preventing a possible century. The event sparked discussions about Sanju Samson's potential IPL captaincy role in upcoming seasons. The performance highlighted fielding and early wickets as decisive factors.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+