Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs SRH: இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? சன்ரைசர்ஸ் கோச் வெட்டோரி சொன்ன விளக்கம்

பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மார்ச் 28 அன்று (இன்று) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது இடைக்கால கேப்டனாக நட்சத்திர வீரர் இஷான் கிஷனை நியமித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வழக்கமான கேப்டனான பேட் கம்மின்ஸ், முதுகு வலி காரணமாகத் தொடரின் ஆரம்பக் கட்டப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வரச் சில நாட்கள் ஆகும் என்பதால், அணி நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இஷான் கிஷனுக்கு உதவியாகத் துணைக் கேப்டனாக அபிஷேக் சர்மா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RCB vs SRH Ishan Kishan Named Sunrisers Hyderabad Interim Captain as Pat Cummins Sidelined by Injury

வெட்டோரி அளித்த விளக்கம்

இஷான் கிஷனை கேப்டனாகத் தேர்வு செய்தது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி விளக்கமளித்துள்ளார். "இஷான் கிஷன் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் ஏற்கனவே ஜார்கண்ட் மாநில அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவரது தலைமைத்துவப் பண்பு மற்றும் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலம்" என்று வெட்டோரி புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், "கடந்த சீசனிலேயே இஷான் கிஷன் அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமைத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவர் மைதானத்தில் கொண்டு வரும் துடிப்பு மற்றும் வேகம் மற்ற வீரர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும். அவரும் அபிஷேக் சர்மாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அணியை வழிநடத்துவதில் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான ஃபார்ம்

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இஷான் கிஷன் 9 போட்டிகளில் 317 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். 193.92 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 மெகா ஏலத்தில் 11.25 கோடி ரூபாய்க்கு இஷான் கிஷனை ஹைதராபாத் அணி வாங்கியது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாகக் கேப்டன் பொறுப்பை ஏற்கும் இஷான் கிஷனுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. பேட்டிங்கில் மட்டுமின்றி, கேப்டன்சியிலும் அவர் ஜொலித்து ஹைதராபாத் அணிக்குச் சிறப்பான தொடக்கத்தைத் தேடித்தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஒருவேளை இஷான் கிஷன் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர் வெற்றிகளை பெற்றால் அவர் வருங்காலத்தில் நிரந்தரமாக கேப்டன் பதவியை பெறவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, March 28, 2026, 9:43 [IST]
Other articles published on Mar 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+