Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி வெற்றியில் ஆஸ்திரேலியாவின் பங்கு இருக்கு.. ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மார்லஸ் நெகிழ்ச்சி

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு மாபெரும் சக்தியாகத் திகழ்கிறார் என்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் பகிரப்பட்ட கிரிக்கெட் ஆர்வம் குறித்து அவர் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 'மனோபல்' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிச்சர்ட் மார்லஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் முன்னிலையில் பேசினார். அவர் கூறுகையில், "மகா மேதை கபில் தேவ் அருகில் நிற்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உறவு தற்போது மிக உயர்ந்த கட்டத்தில் உள்ளது. நமது இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் மீதான ஆர்வம் ஒரே மாதிரியாக பிரதிபலிக்கிறது. நான் வளர்ந்த காலத்தில் பிஷன் சிங் பேடி தான் எனக்குத் தெரிந்த முதல் இந்திய கேப்டன். ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் விராட் கோலி ஒரு மிகப்பெரிய பெயராக உருவெடுத்துள்ளார்" என்றார்.

RCB won and it has Australian participation says Australia Deputy PM Richard Marles

ஆர்சிபி வெற்றியில் ஆஸ்திரேலியா

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றதை ரிச்சர்ட் மார்லஸ் சுட்டிக்காட்டினார். "ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் போட்டியில் விராட் கோலி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். அதே சமயம், அவருக்குத் துணையாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட் ஆகியோரும் விளையாடினர். எனவே, ஆர்சிபி-யின் இந்த வெற்றி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இருதரப்பு உறவின் அடையாளமாக அமைந்துள்ளது" என்று பாராட்டினார்.

அம்பயர் தீர்ப்பால் ஆவேசம்.. RCB வீரர் செய்த செயல்.. 2027 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட தடை

அம்பயர் தீர்ப்பால் ஆவேசம்.. RCB வீரர் செய்த செயல்.. 2027 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட தடை

ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட்

ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வெல்ல இந்த இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களும் முக்கியப் பங்காற்றினர். வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்த சீசனில் 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். அதேபோல், டிம் டேவிட் மிடில் ஆர்டரில் பினிஷராகச் செயல்பட்டு 188.27 என்ற அசுர வேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் 305 ரன்கள் குவித்து ஆர்சிபி-யின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார்.

இரு நாடுகளின் நட்புறவையும், கலாச்சாரத்தையும் கிரிக்கெட் எவ்வாறு இணைக்கிறது என்பதை ஆஸ்திரேலிய துணைப் பிரதமரின் இந்தப் பேச்சு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. விராட் கோலியின் புகழ் உலக எல்லைகளைத் தாண்டி ஜொலித்து வருவதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

Story first published: Tuesday, June 2, 2026, 8:21 [IST]
Other articles published on Jun 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+