For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WPL - ஆர்சிபியை மீட்ட தேவ தூதுவள்.. தனி ஆளாக காப்பாற்றிய வீராங்கனை.. யார் இந்த Ellyse Perry

பெங்களூரு : 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணி பல டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல்வேறு ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல அணியாக உள்ளது. ஆனால் அவர்களால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இத்தனைக்கும் விராட் கோலி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் ஆர் சி பி அணிக்கு ஒரு கோப்பை கூட இல்லையே என்ற சோகம் கிட்டத்தட்ட 2008 ஆம் ஆண்டு முதல் நிலவி வந்தது.இப்படி சோகக்கடலில் மூழ்கி இருந்த ஆர் சி பி ரசிகர்களை தேவ தூதுவளாக வந்து மீட்டவர் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலைஸ் பெர்ரீ.

RCB Ellyse Perry

இப்படி கபில் தேவ் என்ற தனி மனிதர் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த அணியையும் நம்மால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பிக்கை ஊட்டி முக்கியமான போட்டியில் தனி ஆளாக நின்று அபாரமாக விளையாடி உலக கோப்பையை பெற்று தந்தாரோ அதைப்போல் ஒரு ஆல் ரவுண்டர் வீராங்கனை தான் எலைஸ் பெர்ரி.

எலைஸ் பெர்ரி ஒரு கிரிக்கெட் வீராங்கனை மட்டுமல்ல, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி இருக்கிறார். இப்படி கிரிக்கெட், கால்பந்து என இரண்டிலுமே சாதித்து இருக்கிறார். கிரிக்கெட்டில் இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, ஆறு t20 உலக கோப்பை, இரண்டு மகளிர் பிக் பாஸ் லீக் கோப்பை,காமன்வெல்த் போட்டியில் தங்கம், கிரிக்கெட்டர் ஆப் த டிக்கேட் (Decade) டி20 கிரிக்கெட்டர் ஆப் த டிக்கேட், ஓடிஐ கிரிக்கெட்டர் ஆஃப் டிக்கெட் என பல விருதுகளையும் வாங்கிய எலைஸ் பெர்ரிக்கு தற்போது மகளிர் பிரிமியர் லீக் கோப்பையும் கிடைத்திருக்கிறது.

எல்லைஸ் பெர்ரி, ஆர்சிபி அணி எப்போதெல்லாம் தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியை காப்பாற்றி இருக்கிறார். எலிமினேட்டர் போட்டியில் ஆர் சி பி அணி தடுமாறிய போது, தன்னுடைய பேட்டிங்கால் 66 ரன்கள் சேர்த்து அணியை ஒரு கௌரவமான இலக்கை கொண்டு வர பெர்ரி உதவினார்.

இதை போன்று கடைசி லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக பேட்டிங்கில் 40 ரன்கள் விளாசிய எலைஸ் பெர்ரி பந்துவீச்சில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அதற்கு முன்பு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கூட எல்லைஸ் பெர்ரி 49 ரன்களை குவித்தார்.

இறுதி ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அது மட்டுமல்லாமல் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் எல்லைஸ் பெர்ரி வென்று இருக்கிறார். இப்படி தனி ஆளாக ஆர் சி பி அணியின் பல ஆண்டுகனவை நிறைவேற்றி இருக்கிறார்.

Story first published: Monday, March 18, 2024, 7:00 [IST]
Other articles published on Mar 18, 2024
English summary
RCB WPL Champion - Who is Ellyse Perry - Golden girl of the Women cricket WPL - ஆர்சிபியை மீட்ட தேவ தூதுவள்.. தனி ஆளாக காப்பாற்றிய வீராங்கனை.. யார் இந்த எலைஸ் பெர்ரீ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+