
கோப்பையை வெல்வதில் உறுதி
பிளே-ஆப் சுற்றிற்கு இரண்டாவது அணியாக முன்னேறியுள்ள டெல்லி கேபிடல்ஸ், இனிமேல்தான் உண்மையான போட்டியை எதிர்கொள்ள உள்ளதாகவும் கோப்பையை வெற்றி கொள்வதில் தாங்கள் உறுதியுடன் உள்ளதாகவும் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது அணியாக முன்னேற்றம்
ஐபிஎல் 13வது சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கிய அந்த அணி, முதல் நான்கு இடங்களை தொடர்ந்து தக்க வைத்து கொண்டது. கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோற்றாலும் தற்போது ஆர்சிபியை வெற்றி கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம்
ஆர்சிபியுடனான வெற்றியையும் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளதை குறிப்பிடும்வகையிலும் அந்த அணி ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. துபாய் பயணம் துவங்கியதில் இருந்து பல்வேறு நிலைகளில் அணி வீரர்கள் தங்களது மனநிலையை குறிப்பிடும்வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

சீசன் வெற்றியில் உறுதி
வீடியோவின் ஆரம்பத்தில் பிரித்வி ஷா பேசுவதில் துவங்கி துபாயில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வீரர்களை சந்திப்பது, அணியின் பௌலர் ரபடா, இந்த சீசனை வெற்றி கொள்வதில் அனைவரும் உறுதியாக உள்ளதாக கூறுவது வரை தொடர்கிறது. வரும் வியாழக்கிழமை அந்த அணி தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்சுடன் மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications