Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஒரு விஷயம்தான் இந்தியாவோட தோல்விக்கு காரணம்.. புலம்பும் வீரர்கள்!

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. கோஹ்லி அதிரடியாக 75 ரன்கள் எடுத்தார்.

தவான் அதிரடியாக 109 ரன்கள் எடுத்தார். மழை காரணமாக தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது ஆட்டம் தடைபட்டது. இதனால் இலக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது.

அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. இதனால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் மழை பெய்த காரணத்தால் களம் இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக மாறியது. இந்திய வீரர்களே இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை.

மிடில்

மிடில்

இந்திய அணியில் ஓப்பனிங் இறங்க நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். கடைசியில் கூட சமயங்களில் பவுலுர்கள் எதாவது செய்து அடித்து விடுகிறார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் இன்னும் இந்திய அணி சாம்பார் சாதம் சாப்பிட்டது போல மெதுவாக ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இல்லையென்றால் நேற்று 300 ரன் தாண்டவேண்டிய வீரர்கள் 289ல் அவுட் ஆகி இருக்க மாட்டார்கள்.

முக்கியமானது

முக்கியமானது

இந்த போட்டியில் மில்லர் 6 ரன்கள் இருக்கும் போது சாஹல் ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அவர் கேட்சை தவறவிட்டார். தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது.

அடுத்த வாய்ப்பு

அடுத்த வாய்ப்பு

அதே ஓவரில் சாஹல் பந்தில் மில்லர் மீண்டும் அவுட் ஆனார். ஆனால் அது நோ பால் என்பதால் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் பின் அதிரடி பாதைக்கு மாறி 39 ரன்களை 28 பந்தில் எடுத்தார். இதில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் அடக்கம். தோல்விக்கு இதுதான் காரணம் என்று தவான் கூறியுள்ளார்.

Story first published: Sunday, February 11, 2018, 12:02 [IST]
Other articles published on Feb 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+