Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பழசு எல்லாம் நியாபம் வருமா இல்லயா”.. வெற்றியை கொண்டாடாமல் சிலை போல் இருந்த நியூஸி, வீரர்- காரணம்?

அமீரகம்: இங்கிலாந்துடனான வெற்றியை நியூசிலாந்து வீரர்கள் கொண்டாடிய போது, ஜிம்மி நீஷம் மட்டும் சிலை போல் உட்கார்ந்திருந்தது பேசுப்பொருளாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

அரையிறுதிப்போட்டி

அரையிறுதிப்போட்டி

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ, பட்லர் உள்ளிட்டோர் ஏமாற்ற, பின்னர் வந்த மொயீன் அலி 51 ரன்களும் டேவிட் மாலன் 41 ரன்களும் விளாசினர். அபுதாபி களத்தில் இது சவாலான இலக்கு என்பதால் நியூசிலாந்து தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

நியூஸி, நிதானம்

நியூஸி, நிதானம்

அதன்படியே நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் வீரர் கப்தில் 4 வீரர்களும், வில்லியம்சன் 5 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் குறைந்தது.

டேர்லி மிட்செல் - டேரன் கான்வே ஆகியோர் நிதானமாக ரன்களை குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் இலக்கை விட மிக நீண்ட தூரத்தில் அவர்களின் ஸ்கோர் இருந்தது. இதனால் கடைசி 4 ஓவர்களில் (24 பந்துகள்) நியூசிலாந்து அணிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

அப்போது ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ஜிம்மி நீஷம். ஆட்டத்தின் 16வது ஓவரில் ஸ்ட்ரைக் எடுத்த நீஷம் அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி, சிங்கிள்கள் என 23 ரன்களை விளாசினார். மொத்தமாக 11 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 27 ரன்களை விளாசினார். இவரின் பேட்டிங்கால் உத்வேகமடைந்த டேரில் மிட்செல் அதிரடி காட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.

Recommended Video

கடைசி நேரத்தில் கைமாறிய வெற்றி.. England-ஐ New Zealand வீழ்த்தியது எப்படி ?
அசையாமல் இருந்த நீஷம்

அசையாமல் இருந்த நீஷம்

மிட்செல் சிக்ஸர் மழை பொழிந்து ஆட்டம் நியூசிலாந்து பக்கம் சென்றவுடன், டக் அவுட்டில் இருந்த சக வீரர்கள் அனைவரும் உற்சாகமாக துள்ளி குதித்து வெற்றிக்காக கொண்டாடினார். ஆனால் ஜேம்ஸ் நீஷம் மட்டும் எதுவுமே செய்யாமல், சிலை போன்று அமர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், நீஷமிற்கு என்ன ஆனது என இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கினர்.

வெளியான உண்மை காரணம்

வெளியான உண்மை காரணம்

இந்நிலையில் அதற்கான விடை தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜேம்ஸ் நீஷம் தன்னால் முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்துவிட்டு வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. எனவே இந்த போட்டியிலும் அப்படி எதிர்பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்பதால், கடைசி வரை பொறுத்திருந்து வெற்றியை அறிந்துள்ளார். இது குறித்து நீஷமே தனத் ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 11, 2021, 21:39 [IST]
Other articles published on Nov 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+