“இதெல்லாம் அநியாயம் சார்..” வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டது ஏன்?? உண்மை காரணம்!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஒரு வீரருக்கு மட்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Recommended Video

IND vs WI Sanju Samson ஒதுக்கப்பட்ட பிண்ணனி என்ன? *Cricket

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது.

இதனை முடித்தவுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது.

வங்கதேச புலிகள் அசத்தல்.. 108 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. தொடர்ந்து 10 வது முறை தோல்வி வங்கதேச புலிகள் அசத்தல்.. 108 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. தொடர்ந்து 10 வது முறை தோல்வி

 வெஸ்ட் இண்டீஸ் டூர்

வெஸ்ட் இண்டீஸ் டூர்

இரு அணிகளும் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஜூலை 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வரும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிசிசிஐ வாய்ப்பே தராதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிசிசிஐ-ன் துரோகம்

பிசிசிஐ-ன் துரோகம்

கடந்த 2015ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 13 டி20 இன்னிங்ஸ்களில் தான் விளையாடியுள்ளார். ஆனால் இந்த 13 இன்னிங்ஸ்களுக்கும் இடையே பெரிய இடைவெளிகள் உள்ளன. அயர்லாந்து தொடரில் ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் 42 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். ஆனால் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களை தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து வைத்துள்ள டிராவிட், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறார். அந்தவகையில் இஷான் கிஷான், ரிஷப் பண்ட், ரோகித், கே.எல்.ராகுல் என ஏற்கனவே 4 வீரர்களை ஓப்பனிங்கிற்கு தயாராகி வருகின்றனர். அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை கொண்டு வந்தால் சிக்கலை உருவாக்கும் என்பதால் அவர் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது.

வாய்ப்பு விவரம்

வாய்ப்பு விவரம்

சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட மொத்த வாய்ப்புகள்

1 டி20 vs ஜிம்பாவே - 2015 ஜூலை

1 டி20 vs இலங்கை - 2020 ஜனவரி

2 டி20 vs நியூசிலாந்து - 2020 ஃபிப்ரவரி

3 டி20 vs ஆஸ்திரேலியா - 2020 டிசம்பர்

3 டி20 vs இலங்கை - 2021 ஜூலை

2 டி20 vs இலங்கை - 2022 ஃபிப்ரவரி

1 டி20 vs அயர்லாந்து - 2022 ஜூன்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
sanju samson dropped from West indies tour ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் ) வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
Story first published: Thursday, July 14, 2022, 16:23 [IST]
Other articles published on Jul 14, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X