Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சச்சினின் வாழ்த்தும்.. கோலியின் ஃபார்மும்”.. கவாஸ்கர் கூறிய சுவாரஸ்ய தகவல்.. இது புதுசா இருக்கே!

சென்னை: விராட் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வரவேண்டும் என்றால் சச்சினிடம் புத்தாண்டு பெற்றால் போதும் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது.

Recommended Video

Kohliயின் சரித்திர சாதனை! Ponting,Waugh, Smith வரிசையில் சேர்ந்தார் | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனினும் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. அரைசதம் கூட எடுக்கவில்லை.

 ரசிகர்கள் ஆதங்கம்

ரசிகர்கள் ஆதங்கம்

சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 35 மற்றும் 2வது இன்னிங்ஸில் 18 ரன்களை விளாசியிருந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 2வது ஆண்டாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். கேப்டன்சி அழுத்தங்கள் குறைந்த போதும், அவர் ஏன் இப்படி சொதப்புகிறார் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றால் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து விராட் கோலி புத்தாண்டு வாழ்த்து பெற வேண்டும். அப்படி நடந்தால் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியின் சதங்களை பார்க்கலாம் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறினார். "கண்ணாடியை திருப்பினால் எப்படிபா ஆட்டோ ஓடும்" என்பது போல ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால் இதற்குள் முக்கிய காரணம் ஒளிந்துள்ளது.

சச்சினின் கம்பேக்

சச்சினின் கம்பேக்

2003 - 2004ம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கரும் தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்து வந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ருத்ர தாண்டவம் ஆடினார். முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் அரைசதம் என அனைவருக்கும் ஆச்சரியம் நிறைந்திருந்தது. இந்த விஷயத்தில் தான் சச்சின் - கோலிக்கு இடையே ஒற்றுமை உள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

அவர்கள் இருவருக்குமே அதிகப்படியான பந்துகளை அவுட்சைட் ஆஃப் திசையில் ஆடுவது பிடிக்கும். அப்படி சச்சின் ஆடிய போது, கவர் திசையில் இருந்த வீரர்கள் சுலபமாக கணித்து கேட்ச் பிடித்தனர். இதனால் அவுட்சைட் ஆஃப் ( கவர் திசைகளில் ) ஆடக்கூடாது என முடிவெடுத்த சச்சின், மிட் ஆஃப் மற்றும் ஸ்ட்ரெய்ட் திசையில் மட்டுமே ரன் குவித்தார். எனவே இதே ஐடியா விராட் கோலிக்கும் உதவிகரமாக இருக்கலாம்.

ஐடியாக்கள் பெறலாம்

ஐடியாக்கள் பெறலாம்

சச்சினை தொடர்பு கொண்டு ஒரு புத்தாண்டு வாழ்த்து பெறும் போது, எப்படி அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் கையாண்டார். வேறு திசைக்கு உடனடியாக மாற்றுவது எப்படி என்பது குறித்து கோலி தெரிந்துக்கொள்ளலாம். இது அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் உதவலாம். இதனை மனதில் வைத்துதான் கவாஸ்கர் இதனை கூறியுள்ளார்.

Story first published: Friday, December 31, 2021, 17:09 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+