Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புனே பிட்ச்சில் மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டது ஏன்? சூதாட்ட புகாரில் வெளிவரும் புதிய உண்மைகள்

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. பின் ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த இந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் நடக்க இருந்த சூதாட்டம் கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிட்ச்சை வேகப்பத்துக்கு ஏற்ற மாதிரி மற்றும்படி இதில் பேரம் பேசப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பிட்சில் மாற்றங்கள் செய்ய பராமரிப்பாளர் ஒப்புக்கொண்டது ஏன் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

 போட்டியில் சூதாட்டம்

போட்டியில் சூதாட்டம்

இந்த நிலையில் இந்த போட்டியில் சூதாட்டம் நடக்க இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷனில்' நிறைய தகவல்கள் வெளியாகியது. அதன்படி பத்திரிக்கையாளர்கள் சிலர் சூதாட்ட கும்பல் போல பேசி இன்று போட்டி நடக்க இருக்கும் பிட்சில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கின்றனர். அதன்படி பிட்சை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மற்றும்படி கூறியுள்ளனர். இதற்கு அந்த பிட்சின் பராமரிப்பாளர் உடனே ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் பேரம் வேறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சூதாட்டத்திற்கு ஒப்புக் கொண்டது ஏன்

சூதாட்டத்திற்கு ஒப்புக் கொண்டது ஏன்

இந்த நிலையில் தற்போது அவர் சூதாட்டத்திற்கு ஒப்புக் கொண்டதற்கான காரணம் கூறப்பட்டுளள்து. அதன்படி ''பெரும்பாலும் போட்டி நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பிட்சின் பராமரிப்பாளர் உடன் பத்திரிக்கையாளர்கள் பேசுவது வழக்கம். அப்படி பேசும் சமயங்களில் பிட்ச் குறித்த பொதுவான கேள்விகளும், பிட்சில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படும். இதற்கு பிட்ச் பராமரிப்பாளர் பொதுவாக ஏதாவது பதிலை கூறுவார். அப்படிதான் இவரும் சாதாரணமாக மாற்றித் தருகிறேன் என்று கூறியுள்ளார்'' என பிசிசிஐயின் முன்னாள் தலைமை மைதான பராமரிப்பாளர் பிரசன்னா கூறியுள்ளார். மேலும் "அந்த சாதாரண விஷயத்தை இவர்கள் மிகவும் பெரிது படுத்தி விட்டார்கள். தேவையில்லாமல் இப்போது அவரது வேலையும் போய்விட்டது. இது அநியாயம் '' என்று கூறியுள்ளார்.

 இதுவும் காரணமாக இருக்கலாம்

இதுவும் காரணமாக இருக்கலாம்

இந்த நிலையில் தற்போது புதிய காரணம் ஒன்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி ''அவர் சூதாட்டம் செய்யவில்லை என்றால் ஏன் பணம் கேட்கிறார். இது கண்டிப்பாக சூதாட்டத்திற்கான விருப்பம்தான். ஆனால் அதற்கு அவர் மட்டுமே காரணம் இல்லை. பிட்ச் பராமரிப்பாளர்களுக்கு பொதுவாக குறைவான சம்பளமே தரப்படுகிறது. ஒரு போட்டியில் வேலை செய்யும் நடுவர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் பாதி கூட இவர்களுக்கு தரப்படுவதில்லை. அதுவே கூட அவரை இந்த செயலை செய்ய தூண்டியிருக்கலாம்'' என முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய மைதான பராமரிப்பு தலைவருமான வெங்கட் சுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரை தீவிரமாக விசாரிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 26, 2017, 14:17 [IST]
Other articles published on Oct 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+