For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி பொய் சொல்லவில்லை..IPL கோப்பை வென்றதும் வீட்டுக்கு கூட செல்லவில்லை..ரசிகர்கள் மீது அவ்வளவு பாசம்

மும்பை : ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் அவர்களுக்கு திரும்பி ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியதில் துளி அளவும் பொய் கிடையாது.தோனி தன்னுடைய ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை தனது செயல் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

சச்சின் எவ்வாறு தன்னுடைய ரசிகர்களுக்காக 40 வயதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினாரோ அதேபோல் தோனி ரசிகர்களுக்காக ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்.

Reason behind the MS Dhoni Quick Surgery after IPL Final 2023

தற்போது தோனிக்கு 42 வயது ஆகிறது. அடுத்த மாதம் வந்தால் 43 வயது ஆகிவிடும். இந்த நிலையில் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி இன்னும் ஒரு ஆண்டு ரசிகர்களுக்காக விளையாட முயற்சி செய்வேன். ஆனால் அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் இறுதிப்போட்டி முடிந்தவுடன் தோனி நேரடியாக மும்பை சென்று இருக்கிறார்.

வீட்டிற்கு கூட செல்லாமல் தோனி உடனடியாக அங்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதற்குக் காரணம் அடுத்த ஐபிஎல் சீசன் மினி ஏலத்திற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் தம் முன்பு போல் விளையாட முடியும் என்று தோனியால் உணர முடிந்தால் அவர் அடுத்த சீசனுக்கு தன்னுடைய பயிற்சியை தொடங்கி விடுவார்.அதற்காகத்தான் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக மும்பைக்குச் சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

Reason behind the MS Dhoni Quick Surgery after IPL Final 2023

இதன் மூலம் ஆறு மாதத்திற்குள் தோனி தன்னுடைய உடல் தகுதியை மீட்க முயற்சி செய்து விடுவார். அதன் பிறகு எல்லாம் சரியாக அமைந்தால் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்தும் அவர் முடிவு எடுப்பார். ஆனால் காயும் சரியாகவில்லை முன்பு போல் பேட்டிங் செய்ய முடியவில்லை, ரன்கள் ஓட முடியவில்லை என்றால் அவர் யோசிக்காமல் ஓய்வு பெற்று விடுவார்.

தாம் சொன்னதைத்தான் செய்வேன் செய்வதுதான் சொல்வேன் என்ற வசனத்திற்கு ஏற்ற வகையில் தோனியின் செயல் அமைந்துள்ளது. எனினும் தோனி ரசிகர்களுக்காக செய்தது போதும். இனிமேல் அவர் தனது உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்வதை நல்லது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, June 2, 2023, 12:30 [IST]
Other articles published on Jun 2, 2023
English summary
Reason behind the MS Dhoni Quick Surgery after IPL Final 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+