Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் எடுத்தவுடன் கோஹ்லி ஏன் 'அப்படி' செய்தார் தெரியுமா?

கொல்கத்தா: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 50 ரன்கள் அடித்த உடன் கோஹ்லி தனது பேட்டை விஐபிக்கள் அமர்ந்திருந்த பக்கம் நோக்கி காட்டி தலை வணங்கியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மழையின் காரணமான 20 ஓவர்கள் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கோஹ்லி

கோஹ்லி

விராட் கோஹ்லி 37 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவரும், யுவராஜ் சிங்கும் சேர்ந்து அணியின் ரன்கள் அதிகரிக்க வழி வகுத்தனர்.

50 ரன்கள்

கோஹ்லி 50 ரன்கள் எடுத்தவுடன் தனது பேட்டை விஐபிக்கள் அமர்ந்திருந்த பக்கம் நோக்கி காண்பித்ததுடன் குனிந்து தலைவணங்கினார். அப்போது அவர் எதற்காக அப்படி செய்தார் என தெரியாமல் இருந்தது.

சச்சின்

சச்சின்

விஐபி கேலரியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் அமர்ந்திருந்தார். தனது குருவான சச்சினுக்கு மரியாதை செய்யவே கோஹ்லி பேட்டை தூக்கி காண்பித்து தலை வணங்கியுள்ளார்.

அவரை பார்த்து தான்

அவரை பார்த்து தான்

நான் சச்சினை பார்த்து தான் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன். சச்சின் இது போன்று பல முறை செய்துள்ளார். அவர் பேட்டை தூக்கி காண்பிக்கும் போது எல்லாம் ரசிகர்கள் உற்சாகத்தில் குதிப்பார்கள். அவரைப் போன்று அவர் முன்பு செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அமிதாப், அம்பானி

அமிதாப், அம்பானி

நேற்றைய போட்டியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி ஆகியோர் நேரில் பார்த்தனர். இந்திய அணி வெற்றி பெற்றதும் அமிதாப் மூவர்ண கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Story first published: Sunday, March 20, 2016, 10:55 [IST]
Other articles published on Mar 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+