அஸ்வின் ஒதுக்கப்பட்டது நியாயமா??.. இங்கிலாந்து டெஸ்டில் இறுதி நேரத்தில் நடந்த மாற்றம்.. உண்மை இதோ!!
பெர்மிங்கம்: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5வது டெஸ்ட் போட்டி இன்று பெர்மிங்கம் நகரத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பவுலிங் ப்ளான்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத பவுலிங் திட்டத்தை ராகுல் டிராவிட் செயல்படுத்தினார். இந்திய அணியின் பலமே ஸ்பின்னர்கள் தான். இதற்காக 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

டிராவிட்டின் முடிவு
இதற்கேற்றார் போலவே ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகின. கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்துள்ள அஸ்வின், பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்து களத்தில் நன்கு பந்துவீசிய ரெக்கார்டும் இருப்பதால் அவரை சேர்க்க டிராவிட் திட்டமிட்டிருந்தார்.

கடைசி நேர மாற்றம்
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தான் அஸ்வின் விலக்கப்பட்டதாக தெரிகிறது. பிட்ச் நன்கு ஈரப்பதத்துடன் இருப்பதால், அதிகப்படியாக வேகப்பந்துவீச்சுக்கு தான் உதவும். எனவே அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை எடுத்தால், வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிற்கும் உதவுவார் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா மட்டும் ஏன்?
கடந்தாண்டு நடைபெற்ற 4 போட்டிகளிலும் ஜடேஜா தான் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றிருந்தார். அவர் அங்குள்ள தற்போதைய பேட்டிங் வாய்ப்புகள் மற்றும் பவுலிங் வியூகங்களை சற்று அறிந்துவைத்துள்ளார். இதன் காரணமாக தான் ஜடேஜாவுக்கே மீண்டும் வாய்ப்பு தரப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications