Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையை குறைத்து மதிப்பிட்ட பேட்ஸ்மேன்கள்... இந்தியா சொதப்பியது எப்படி?

தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் மோசமாக ஆடி இருக்கிறது.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். டோணியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியிடம் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, இந்த போட்டியில் அவர்களிடம் பொட்டி பாம்பாக சுருண்டது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங்கை பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகமே இந்திய அணியை பாராட்டியது. தவான், ரோஹித் என்ற இரண்டு ஓப்பனர்கள் இது இல்லாமல் ஆப்ஷனில் இருக்கும் இன்னும் சில ஓப்பனர்கள் என்று இப்போது இந்திய அணி ஓப்பனிங் நன்றாகவே இருக்கிறது. ஆனால் இது போன்ற முக்கியமான சமயத்தில் இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆவது எல்லாம் மோசம். மேலும் கேப்டனாக இருக்கும் ரோஹித் இந்த சமயத்தில் தான் சிறப்பாக ஆட வேண்டும்.

மாற்று இல்லையா

மாற்று இல்லையா

ஒருநாள் அணியில் நீண்ட காலமாக 3 வது இடத்தில் இறங்குவது கோஹ்லி மட்டும்தான். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போது அணியை அவர்தான் தூக்கி நிறுத்தி வந்தார். ஆனால் ஒரே ஒரு போட்டியில் அவர் இல்லை என்றதும் இந்திய அணியின் உண்மையான நிலை தெரிந்துவிட்டது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விட மூன்றாவதாக இறங்கும் வீரர்கள்தான் அதிக அழுத்தத்தை உணர்வார்கள். அதற்கு கண்டிப்பாக ஷ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள்.

மோசமான பேட்டிங் ஆர்டர்

மோசமான பேட்டிங் ஆர்டர்

உலகின் மிகவும் சிறந்த பேட்டிங் ஆர்டர் இந்திய அணியிடம் தான் இருக்கிறது என்று எல்லோரும்கூறி வந்தார்கள். ஆனால் இன்றைய பேட்டிங் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்தது. ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என்று வரிசையாக சொதப்பினார்கள். இந்த வருடத்தில் இந்திய அணியின் மிக மோசமான பேட்டிங் இது மட்டும்தான்.

குறைத்து எடை போட்டுவிட்டார்கள்

குறைத்து எடை போட்டுவிட்டார்கள்

இந்திய அணியில் உள்ள 11 பேரில் மொத்தம் மூன்று வீரர்கள் மட்டுமே 10 ரன்களுக்கு அதிகமாக எடுத்தார்கள். மொத்தம் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். டோணி மட்டுமே 65 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளின் வெற்றியின் காரணமாக இலங்கையை இந்திய அணி மிகவும் குறைவாக மதிப்பிட்டு இருக்கிறது. இலங்கையின் லக்மால் மட்டுமே தனியாக 4 விக்கெட் எடுத்துள்ளார். 10 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தார். இதே நிலையில் இந்திய பேட்டிங் தென்னாப்பிரிக்காவிலும் விளையாடினால் இந்த வருடம் எடுத்த நல்ல பெயர் எல்லாம் அடுத்த வருடம் காணாமல் போய்விடும்.

Story first published: Sunday, December 10, 2017, 16:10 [IST]
Other articles published on Dec 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+