தீபக் ஹூடாவுக்கு திடீர் புரோமோஷன் ஏன்? வாய்ப்பை இழக்கும் ருத்துராஜ்.. லட்சுமண் டிவிஸ்ட்டின் பின்னணி
டுபிளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக தீபக் ஹூடா புரோமோஷன் பெற்றார்.
நடுவரிசை வீரராக இருந்த அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதற்கு தகுந்தால் போல் தீபக் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

தீபக் ஹூடா ஏன்?
தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம், ருத்துராஜ்க்கு இனி தொடக்க வீரராக வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபக் ஹூடாவை தொடக்க வீரராக களமிறக்கியதன் பின்னணி குறித்து தற்போது காணலாம். தீபக் ஹூடா ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக பந்துவீச கூடியவர்.

ருத்துராஜ்க்கு சிக்கல்
பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக் கூடியவர். நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நடுவரிசையில் தீபக் ஹூடாவுக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துரஜ் கெய்வ்ட் மொத்தம் 5 போட்டியிலும் சேர்த்து 96 ரன்களை தான் அடித்தார்.

மாஸ்டர் பிளான்
இந்த நிலையில், எப்படியும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காது. தற்போது கேஎல் ராகுலும் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுக்க ஜெர்மனி சென்றுள்ளார். இதனால் , சுழற்பந்துவீசும் ஒரு பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்கினால். , அது அணியின் பெலன்ஸ்க்கு உதவியாக அமையும்.

இது தான் காரணம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இடதுகை சுழற்பந்துவீச்சாளராக ஜடேஜாவும், லேக் ஸ்பின்னராக சாஹலும் இருப்பார். அதே பிளேயிங் லெவனில் கூடுதலாக ஒரு ஆஃப் ஸ்பின்னர் இருந்தால் , விதவிதமான வெரைட்டி பந்துவீச்சை வைத்து எதிரணிக்கு அழுத்தத்தை தரலாம். இதனால் தான் லட்சுமண் நேற்று ருத்துராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா களமிறங்கினார்.


Click it and Unblock the Notifications