Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு கண்களில் பிரச்சினை? தொடர்ந்து ஒரே மாதிரி அவுட்டாகும் பின்னணி.. சரி செய்வாரா கோலி?

மொஹாலி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இன்றைய ஆட்டத்தில் கோலி சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி இன்றும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரன் மிஷின் என்று அழைக்கப்படும் கோலி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

கோலி ஆட்டமிழப்பு

கோலி ஆட்டமிழப்பு

விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் எம்புல்தேனியா வீசிய பந்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஸ்டம்பை நோக்கி வெளியிலிருந்து உள்ளே வரும் பந்தை கணிக்க முடியாமல் தொடர்ந்து ஆட்டமிழக்கிறார் விரட் கோலி. இதே போன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை நோக்கி இன்ஸ்விங் செய்யும் பந்தில் கோலி ஆட்டமிழக்கிறார்.

கண்களில் சிக்கல்

கண்களில் சிக்கல்

இப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தாலே அவருக்கு இரண்டு பிரச்சினை இருக்கும். ஒன்று கண் பார்வையில் குறைபாடு மற்றும் கைகள் மூளை சொல்லும் வேகத்தில் செயல்பட முடியாத Reflex பிரச்சினை. ஆனால் ஷாட்களை ஆடுவதில் கோலிக்கு எந்த குறைபாடும் இல்லை. இதனால் கோலிக்கு கண்களில் தான் சிக்கல் உள்ளது.

கண்ணாடி

கண்ணாடி

விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் போட்டிக்கு வெளியே கண்ணாடியுடன் தான் இருப்பார். இது ஸ்டைலுக்கா, இல்லை கண்களில் பிரச்சினையா என்ற தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து ஸ்டம்புக்கு வரும் பந்தில் அவர் ஆட்டமிழந்து பின்னர் அதிர்ச்சியுடன் பவுலரை பார்ப்பது எல்லாம் கண்களில் சிக்கல் இருப்பதையே காட்டுகிறது.

சேவாக்

சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கிற்கும் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவரது ஆட்டம் பாதிக்கப்பட்டு பின்னர் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து வீரர் ராஸ் டைலருக்கும் இதே போன்று பிரச்சினை ஏற்பட, அவர் கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் சதம், சதமாக விளாசினார். இதனால் கோலி தமக்கு இது போன்ற பிரச்சினை இருந்தால் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும், இல்லையேனில் அதற்கு ஏற்றார் போல் தனது பேட்டிங் நுணக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

Story first published: Friday, March 4, 2022, 16:33 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+