Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங்கில் அசத்தியது.. பேட்டிங்கில் கோட்டை விட்டது... இந்தியாவின் தோல்விக்கு காரணம்!

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருந்தும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நான்காவது நாளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 31 ரன்களில் இங்கிலாந்து அபாரமாக வென்றது.

டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த ரன்னில் இந்தியா தோல்வியடைவது இது 4வது முறையாகும். இதற்கு முன் பாகிஸ்தானிடம் 1999ல் 12 ரன்கள், பாகிஸ்தானிடம் 1987ல் 16 ரன்கள், ஆஸ்திரேலியாவிடம் 1977ல் 16 ரன்களில் தோல்வியடைந்திருந்தது.

மூன்றாவது முறை

மூன்றாவது முறை

டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த இலக்கு இருந்தும் இந்தியா தோல்வியடைவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் எதிராக 1997ல் 120 ரன்கள், இலங்கைக்கு எதிராக 2015ல் 176 ரன்கள் இலக்கு இருந்தும் இந்தியா தோல்வியடைந்தது.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

இந்த போட்டியில் நான்கு நாட்களில் 4 இன்னிங்ஸ் விளையாடப்பட்டு, 40 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், சொந்த மண்ணில் விளையாடுவது, பவுலிங் வலிமையாக இருப்பது அதற்கு மிகவும் சாதகமானது.

ஆறுதல் அளித்த கோஹ்லி

ஆறுதல் அளித்த கோஹ்லி

இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு இன்னிங்ஸிலும் அபாரமாக விளையாடினார். இந்த டெஸ்டில் சதமடித்த ஒரே வீரர் அவர்தான். மற்ற எவரும் அரை சதத்தை எட்டவில்லை. முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் அடித்தார். அதாவது அணியின் ஸ்கோரில் 45.87 சதவீதம் கோஹ்லி அடித்ததாகும்.

பேட்டிங் தேறணும்

பேட்டிங் தேறணும்

மிகவும் வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட அணி என்று பெயரெடுத்த இந்தியா, இந்தப் போட்டியில் பவுலிங்கில் சாதித்தாலும், பேட்டிங்கில் சொதப்பியது. அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது. பேட்டிங்கில் சரியாக சோபித்தால் மட்டுமே, அடுத்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தவிர்க்க முடியும்.

Story first published: Saturday, August 4, 2018, 18:36 [IST]
Other articles published on Aug 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+