For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2023 உலகக்கோப்பை கண்டிப்பா இந்தியாவுக்கு தாங்க.. மத்த எந்த டீமிலும் இப்படி ஒரு லிஸ்ட் இல்லை!

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளன.

Reasons why India will win world cup 2023

இந்த முறை இந்த தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அனைத்து முன்னணி அணிகளும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்று தங்களை உலகக்கோப்பை தொடருக்காக தயார் செய்து வருகின்றன.

இந்த நிலையில், எந்த அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை கொண்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு அணியிலும் பல குறைகள் இருக்கின்றன. இந்திய அணி தற்போது நல்ல ஃபார்மில் உள்ள வீரர்களை அணியில் கொண்டுள்ளது. அதைத் தவிர ஐந்து முக்கிய காரணங்கள் இந்தியா தான் இந்த முறை உலகக்கோப்பை வெல்லும் என அடித்துச் சொல்கின்றன.

ரோஹித் சர்மாவின் தலைமை : இந்திய அணியில் தோனிக்கு பின் கேப்டனான விராட் கோலி ஐசிசி தொடர்களில் எந்த வெற்றியையும் பெற்றுத் தரவில்லை. ஆனால், ரோஹித் சர்மா இதுவரை ஆடிய பெரிய தொடர்களில் எல்லாம் தன் கேப்டன்சியை நிரூபித்து இருக்கிறார்.

2023 ஆசிய கோப்பை தொடரை இந்தியா வென்றது. அதற்கு ரோஹித் சர்மாவின் தலைமை முக்கிய காரணமாக அமைந்தது. 2022 டி20 தொடரில் கூட இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது. அப்போது சில தவறுகளை இந்திய அணி செய்தாலும், அந்த தவறுகள் இந்த முறை நடக்காமல் இருக்க ரோஹித் சர்மா அணித் தேர்வில் முழு கவனத்தை செலுத்தி ஒவ்வொரு இடத்திற்கும் இரண்டு சிறந்த மாற்று வீரர்களை தயார் செய்து இருக்கிறார்.

மேலும், ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளார். அதனால், அவருக்கு பெரிய தொடர்களில் எப்படி அணியை வழிநடத்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.

மூவர் கூட்டணி : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி என மூவரும் தங்களின் சிறந்த ஃபார்மில் உள்ளனர். அவர்கள் துல்லியமாக பந்து வீசுவதில் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே தான் செல்கிறார்கள்.

ஆசிய கோப்பை இறுதியில் சிராஜின் தீப்பிழம்பான பந்துவீச்சை இன்னும் யாரும் மறந்திருக்க முடியாது. ஷமி ஆஸ்திரேலிய தொடரில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

அந்த மூவரும் ஒரே போட்டியில் இணைந்து பந்து வீசினால், எதிரணிகள் பாடு திண்டாட்டம் தான். அவர்கள் மூவருமே கூட தனியாக உலகக்கோப்பையை வென்று கொடுக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கவர்கள். அவர்களுக்கு உலகக்கோப்பை தொடரின் இடையே காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே இந்திய அணி நிர்வாகத்தின் பொறுப்பு.

அனுபவ அணி : தற்போது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளில் சில அணிகளில் மட்டுமே அதிக ஆண்டுகள், அதிக போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் ஆடிய வீரர்கள் உள்ளனர். அதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த விராட் கோலி, 2007இல் இருந்தே ஒருநாள் கிரிக்கெட் ஆடும் ரோஹித் சர்மா, பத்தாண்டுகளுக்கு மேல் பந்து வீசி வரும் ஜடேஜா மற்றும் ஷமி, தற்போது டெஸ்ட் அணியின் அனுபவ வீரர் அஸ்வின் (உலகக்கோப்பையில் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது) என பல அனுபவ வீரர்கள் உள்ளனர்.

இவர்களைத் தவிர ஐந்தாண்டு அனுபவம் கொண்ட கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரும் அணியில் உள்ளனர். இவர்களின் அனுபவம் இக்கட்டான சூழ்நிலையில் அணியை கரை சேர்க்கும்.

சுழற் பந்துவீச்சு நாயகர்கள் : இன்று ஒருநாள் போட்டியில் எதிரிகளை மிரட்டும் வல்லமை கொண்ட சுழற் பந்து வீச்சாளர்களில் முதல் மூன்று இடங்களில் குல்தீப் யாதவ் பெயர் நிச்சயம் இடம் பெறும். அப்படி ஒரு ஃபார்மில் இருக்கிறார் குல்தீப் யாதவ்.

அடுத்து அனுபவ ஜடேஜா மற்றும் அஸ்வின் இருக்கிறார்கள். ஒருவேளை காயத்தில் இருந்து அக்சர் பட்டேல் மீண்டும் அணியில் இணைந்தாலும் அவரும் சிறப்பான சுழற் பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சு எடுபடும் என்பதால் இவர்கள் போட்டிகளில் இந்திய அணியின் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் வீரர்களாக இருப்பார்கள்.

சொந்த மண் : 2011 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. அந்த தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. 2015இல் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்றது. இரு அணிகளும் இறுதிப் போட்டி வரை முன்னேறின. அப்போது ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.

அடுத்து 2019இல் இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த அணி அப்போது உலகக்கோப்பை வென்றது. தற்போது மீண்டும் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது.

எனவே, இந்திய அணி மீண்டும் சொந்த மண்ணில் உலகக்கோப்பை வெல்ல அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை நம் வீரர்களுக்கு அறிமுகமான ஒன்றாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது எளிதான ஒன்றாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல், இந்திய அணி ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருந்து தங்கள் ஆதரவை அளிப்பார்கள். அதுவே இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் முக்கிய விஷயமாக இருக்கும்.

Story first published: Monday, September 25, 2023, 8:09 [IST]
Other articles published on Sep 25, 2023
English summary
Top 5 reasons why India will win world cup 2023. Rohit Sharma captaincy, Experienced players, pace trio, spin specialists and home ground advantage will help India win the world cup for the third time.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+