For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்கெங்கு காணினும் ஒயிட் வாஷ்தான்.. என்ன காரணம்?

Recommended Video

எங்கெங்கு காணினும் ஒயிட் வாஷ்தான்...என்ன காரணம்?- வீடியோ

பெங்களூரு: 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட ஒயிட் வாஷ் தோல்விகளின் தொகுப்பு.

தற்போது சர்வதேச போட்டிகளில் ஒயிட் வாஷ் வெற்றி பெறுவது அதிகரித்துள்ளது. ஒயிட் வாஷ் வெற்றி என்பது ஒரு போட்டித்தொடரில் எதிரணியை ஒரு வெற்றி கூட பெற விடாமல் அனைத்து போட்டிகளிலும் ஒரே அணியே வெற்றி பெறுவதாகும்.

அவ்வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒயிட் வாஷ் வெற்றிகள் பற்றிய விவரங்கள் இதோ.

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா

சமீபத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றது. இதன் மூலம் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் இது பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது.

அயர்லாந்து vs இந்தியா

அயர்லாந்து vs இந்தியா

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலில் அயர்லாந்தில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து ஒயிட் வாஷ் தோல்வியை அடைந்தது. வலிமை வாய்ந்த இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தியதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை.

வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்

வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்

வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி படுதோல்வி அடைந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வங்கதேசம் அணி, டெஸ்ட் போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஒயிட் வாஷ் தோல்வி அவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.

ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்

ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடந்த முத்தரப்பு தொடரில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 5 போட்யிகளிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றது. இப்போட்டி தொடரின் நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஜமான் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இலங்கை vs தென்னாபிரிக்கா

இலங்கை vs தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டுகளிலும் படுதோல்வி அடைந்தது. தர வரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி,துணைக்கண்டத்தில் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இலங்கை சுழல் பந்துவீச்சாளர்க 20 விக்கெட்களையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 25, 2018, 15:48 [IST]
Other articles published on Jul 25, 2018
English summary
Recent white wash victories in 2018
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X