Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேண்டாம்..! டீமை விட்டு போகாதீங்க..!! ப்ளீஸ்..! கெஞ்சும் ஜாம்பவான்கள், மறுக்கும் ஸ்டார் வீரர்..!!

இஸ்லாமாபாத்: ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருக்கு, முன்னாள் வீரர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் முகமது அமீர். 27 வயதான இளம் வீரர். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

அறிக்கை, ஓய்வு

அறிக்கை, ஓய்வு

இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஒருநாள், டி 20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவேன்.

வாய்ப்பு அளிக்கிறேன்

வாய்ப்பு அளிக்கிறேன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. அதற்காக பாகிஸ்தான் அணியில் பல நல்ல பவுலர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். அதனால் நான் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வை பெறுகிறேன் என்று கூறியிருந்தார்.

நிர்வாகம் அதிர்ச்சி

நிர்வாகம் அதிர்ச்சி

இளம் வீரரின் இந்த அதிரடி முடிவு, பாகிஸ்தான் அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களும் அவரது முடிவால் அதிருப்தி அடைந்தனர். முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அணியின் நலனை கருத்தில் கொண்டு முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்நிலையில், முகமது அமீர், டெஸ்ட் ஓய்வு முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

அவசியம் தேவை

அவசியம் தேவை

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முடிவை அமீர் கண்டிப்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர் பாகிஸ்தான் அணிக்கு தேவை. நாட்டிற்காக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஜாம்பவான் என்ற பெயரை எடுக்க முடியும்.

என்னமோ நடக்கிறது

என்னமோ நடக்கிறது

கவன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினால் யாரும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். முகமது அமிர் முடிவை ஹசன் அலியும் பின்பற்றக்கூடும். ரியாஸ், ஜூனைத்கான் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

Story first published: Saturday, August 24, 2019, 9:52 [IST]
Other articles published on Aug 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+