Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குறைந்த பந்தில் அதிக ரன்கள்.. ஒரே மேட்சில் தென் ஆப்பிரிக்க, மே.இ.தீவுகள் கேப்டன்கள் சாதனை!

சிட்னி: ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த பந்துகளில் செஞ்சுரி அடித்த சாதனைக்கு சொந்தக்காரரான தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் இன்றைய மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் குறைந்த பந்துகளில் 150 ரன்கள் எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.

சமீபத்தில்தான், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தார் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன், ஏபிடி வில்லியர்ஸ். இதனிடையே, இன்றைய மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளில் செஞ்சுரி அடித்தார் அவர்.

150 சாதனை

150 சாதனை

அதன்பிறகு மேலும், வீராவேசம் கொண்ட வில்லியர்ஸ், 64 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் குறைந்த பந்தில் அடிக்கப்பட்ட நூற்று ஐம்பது ரன்னாகும். முன்னதாக, 2011ல், வங்கதேசத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 83 பந்துகளில் 150 அடித்ததே சாதனையாக இருந்தது.

3 சாதனைகளும் ஒருவருக்கே

3 சாதனைகளும் ஒருவருக்கே

16 பந்துகளில் 50 ரன்களும், 31 பந்துகளில் சதமும் அடித்து உலக சாதனை படைத்திருந்த ஏபிடி வில்லியர்ஸ், இன்று, 64 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து அந்த சாதனையையும் தனது பெயரில் எழுதிக் கொண்டார்.

அணியும் சாதனை

அணியும் சாதனை

தென் ஆப்பிரிக்கா இன்று குவித்த 408 ரன்கள்தான், ஆஸ்திரேலியாவில் இதுவரை அடிக்கப்பட்ட தனி ஒரு டீமின் அதிகபட்ச ஸ்கோராகும்.

மே.இ.தீவுகள் சோக கீதம்

மே.இ.தீவுகள் சோக கீதம்

ஒருபக்கம் மகிழ்ச்சியான சாதனைகள் தென் ஆப்பிரிக்காவுக்கு என்றால், சோகமான சாதனை மே.இ.தீவுகளுடையது. அந்த அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜேசன் ஹோல்டர் 10 ஓவர்கள் வீசி 104 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். உலக கோப்பை வரலாற்றில் இவ்வளவு அதிகமாக ரன் தந்த பவுலர் இவர்தான் என்பதுதான் அந்த மோசமான சாதனை. ஹோல்டர் இரு ஓவர்களை மெய்டனாக வீசியிருந்தார். ஆக, 8 ஓவர்களித்தான் இத்தனை ரன்கள் என்றால் நம்ப முடியாதுதான். எல்லாம் வில்லியர்ஸ் செய்த மாயம்.

எதிரணி கேப்டனுக்கு குறி

எதிரணி கேப்டனுக்கு குறி

ஏனெனில் வில்லியர்ஸ் மட்டுமே, ஹோல்டர் வீசிய 21 பந்துகளை சந்தித்து 76 ரன்களை குவித்துள்ளார். தனது எதிரணி கேப்டனை தென் ஆப்பிரிக்க கேப்டன் கிழி, கிழி என்று கிழித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறைந்த பந்தில் நிறைய ரன்கள்

குறைந்த பந்தில் நிறைய ரன்கள்

64 பந்துகளில் 150 ரன் குவித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் உலக சாதனையை பதிவு செய்துள்ளார். அதேபோல 10 ஓவர்களில் 104 ரன்களை விட்டுக் கொடுத்து மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரும் உலக கோப்பையில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அப்படியானால், குறைந்த பந்தில் நிறைய ரன்கள் என்ற அடிப்படையில் இருவருமே சாதனைக்காரர்கள்தானே..

Story first published: Friday, February 27, 2015, 14:13 [IST]
Other articles published on Feb 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+