16 தொடர்களில் 14ல் வெற்றி… இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்
மும்பை: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றதன் மூலம், இந்த ஆண்டில், தான் விளையாடிய 16 தொடர்களில், 14ல் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கி்ல் வென்றது.

அதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்திலும் வென்று 3-0 என தொடரை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி மிகவும் பொன்னான ஆண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கியது. பல்வேறு சாதனைகளை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புரிந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இந்திய அணி 16 தொடர்களில் விளையாடியுள்ளது. அதில், 14ல் வெற்றியைக் கண்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றதன் மூலம், தொடர்ந்து, 5 தொடர் வெற்றியையும் இந்திய அணி பதிவு செய்துள்ளது.
Story first published: Monday, December 25, 2017, 16:26 [IST]
Other articles published on Dec 25, 2017


Click it and Unblock the Notifications