Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் இலங்கையின் பாண்ட்யா.. நமக்கு சோதனைதான்!

கோல்கத்தா: இந்திய அணியின் இளம் புயல் ஹார்திக் பாண்ட்யா போன்ற ஹேர்ஸ்டைலில் உள்ள இலங்கையின் மிகவேகப் பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால், புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி, கோல்கத்தாவில் நடக்கிறது. முதலில் விளையாடியத் துவங்கிய இந்திய அணி, இரண்டாவது நாளான இன்று ஆட்ட நேர இறுதியி்ல், 5 விக்கெட் இழப்புக்கு, 74 ரன்கள் என்ற நிலையில் ஆட்டங்கண்டுள்ளது.

Record for Lakmal


முதல் நாளான நேற்று, மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்திய லக்மால், தொடர்ந்து 7 மேடின் ஓவர்கள் வீசியுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 46 பந்துகளில் அவர் ரன் ஏதும் கொடுக்கவில்லை. இன்றைய ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்களில் 9 மேடின் வீசியுள்ளார். 5 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து அதிக மேடின் ஓவர் வீசிய இலங்கை வீரர் சாதனை சமிந்த வாசிடம் உள்ளது. 2005ல் சென்னை சேப்பாக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தொடர்ந்து 11 மேடின் ஓவர்களை வீசினார்.

தொடர்ந்து அதிக மேடின் ஓவர்கள் வீசிய சாதனையை, இந்திய வீரர் பாபு நட்கர்னி, 1963ல் புரிந்தார். 6 பந்துகள் கொண்ட ஓவர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக அப்போது சென்னையில் நடந்த ஆட்டத்தில் பாபு நட்கர்னி, 21 மேடின் ஓவர்களை தொடர்ந்து வீசியுள்ளார். அதாவது, தொடர்ந்து, 131 பந்துகளில் அவர் ரன் ஏதும் கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் தொடர்ந்து அதிக மேடின் பந்துகள் வீசிய சாதனை, தென்னாப்பிரிக்காவின் ஹியூக் டேபீல்ட், 1956ல் புரிந்துள்ளார். அப்போது, ஒரு ஓவருக்கு, 8 பந்துகள் வீசப்பட்டன. அவ்வாறு, தொடர்ந்து 16 ஓவர்கள், அதாவது, 137 பந்துகளில் அவர் ரன் ஏதும் கொடுக்கவில்லை.
Story first published: Friday, November 17, 2017, 18:31 [IST]
Other articles published on Nov 17, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+