சாதனையுடன் 2017ம் ஆண்டை முடித்த இந்திய கிரிக்கெட்!
டெல்லி:இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒருதினப் போட்டித் தொடர்களில் தோற்றதில்லை என்ற சாதனையுடன், தொடர்ந்து அதிக தொடர்களில் வென்ற அணி என்ற சாதனைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்திய அணி பிடித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என வென்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக, இந்தியாவில் நடந்துள்ள ஒருதினப் போட்டித் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததில்லை. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் வென்றதன் மூலம், தொடரை வென்று அந்த சாதனையை இந்தியா தக்க வைத்தது.
இதற்கிடையில், தொடர்ந்து, 8 ஒருதினப் போட்டித் தொடரை வென்று, தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கடைசியாக, 2016 ஜனவரியில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இந்தியா இழந்தது
இந்தப் பட்டியலில், 14 தொடர் வெற்றிகளுடன் வெஸ்ட் இன்டீஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணி இதற்கு முன், 2007-2009ல் தொடர்ந்து ஆறு ஒருதினப் போட்டித் தொடர்களில் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications