Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை டி-20 போட்டி.. பார்ப்பதில் சாதனை ...டிவியில் 13.31 கோடி பேர் பார்த்தார்களாம்

டாக்கா: கடந்த மாதம் வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டியை அதிகமானோர் டிவி மற்றும் இன்டர்நெட் மூலம் இந்தியர்கள் பார்த்து ரசித்ததாக தெரிய வந்துள்ளது.

டிவி மற்றும் இணையத்தின் பார்வையாளர்களை குறிப்பிட்ட முறையில் அளவீடு செய்து வருகிறது ஆய்வு நிறுவனமான டாம் -TAM. இதனடிப்படையில் நிகழ்ச்சிகள் தர வரிசைப் படுத்தப் படுகின்றன.

அந்த வகையில் நேற்று மாலை டாம் அளித்துள்ள தகவலின் படி டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியை ஊடகங்கள் வழியாக அதிகளாவிலானோர் கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Record TV and internet viewers for World T20 in Bangladesh

இதுவே முதல் முறை...

சர்வதேச அளவிலான டுவென்டி 20 தொடர் ஒன்றை இந்தியாவில் அதிக அளவிலானோர் பார்த்து ரசித்தது இதுவே முதல் முறையாகும்.

13.31 கோடி பேர்...

2014 உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டியை 13.31 கோடி பேர் பார்த்துள்ளனராம் இந்தியாவில்.

இது அதிகம்....

இது கடந்த 2012ல் இலங்கையில் நடந்த போட்டியைப் பார்த்து ரசித்தவர்களை விட 23.4 சதவீதம் அதிகமாகும். மேலும் 2010ல் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த போட்டியை விட 57 சதவீதம் அதிகமாகும்.

உலக அளவில்...

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 39 கோடி இந்தியர்கள் இதைப் பார்த்துள்ளனர்.

இணையம் வாயிலாக....

மேலும் starsports.Com இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஒளிபரப்பையும் 2.24 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

நேரடி ஒளிபரப்பு...

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி ஆகியவற்றின் மூலம் ஸ்டார் டிவி நேரடியாக போட்டிகளை ஒளிபரப்பியது.

நேரில் விசிட்...

இந்தியா, இலங்கை இடையே நடந்த இறுதிப் போட்டியை மட்டும் 19.3 லட்சம் பேர் நேரிலும், டிவி மூலமாகவும் பார்த்துள்ளனர். இணையதளததில் இதைப் பார்க்க விசிட் அடித்தோர் எண்ணிக்கை 37.6 லட்சம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Story first published: Wednesday, April 23, 2014, 14:02 [IST]
Other articles published on Apr 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+