புதுமாப்பிள்ளைக்காக சாதனை காத்திருக்கிறது
டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க புது மாப்பிள்ளை கோஹ்லிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மூன்று டெஸ்ட்கள், ஆறு ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது இந்திய கிரிக்கெட்அணி.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5ம் தேதி துவங்குகிறது.
சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைக்க வேண்டிய புதிய சாதனை வாய்ப்பு, இந்தத் தொடரில் புது மாப்பிள்ளை விராட் கோஹ்லிக்கு கிடைக்க உள்ளது.
கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றி என்ற பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி 32 போட்டிகளில், 20ல் வென்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
Story first published: Wednesday, January 3, 2018, 15:20 [IST]
Other articles published on Jan 3, 2018


Click it and Unblock the Notifications