For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேலைய வேணும்னா குறைச்சிக்கங்க... ஆனா தீவிரமா பிராக்டீஸ் செய்யணும்.. விராட் திட்டவட்டம்

ஷார்ஜா : ஆர்சிபி அணி வீரர்கள் கடந்த சில தினங்களாக துபாயில் தீவிரமாக பிராக்டீஸ் செய்துவந்த நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக தற்போது ஷார்ஜாவில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அணி வீரர்களின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளதாக அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்து வருகிறார். இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் அவரது செயல்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் வேலையை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளுங்கள், ஆனால் பயிற்சியின் தீவிரம் கண்டிப்பாக குறையக் கூடாது என்று அவர் வீடியோ மூலம் தன்னுடைய அணி வீரர்களுக்கு மெசேஜ் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ரெய்னா.. உண்மையான காரணத்தை தேடும் பிசிசிஐசிஎஸ்கேவிலிருந்து விலகிய ரெய்னா.. உண்மையான காரணத்தை தேடும் பிசிசிஐ

ஆர்சிபி அணி தீவிர பயிற்சி

ஆர்சிபி அணி தீவிர பயிற்சி

ஐபிஎல் 2020 தொடர் ஆரம்பிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களை போட்டிகளுக்காக தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்களும் முதலில் துபாயில் தீவிர பயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக தற்போது ஷார்ஜாவில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

கடந்த சில தினங்களாக தொடர்ந்துவரும் இந்த பயிற்சிகளில் அணியின் வீரர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து அணி வீரர்களுக்கு வீடியோக்கள் மூலம் பல்வேறு செய்திகளை தெரிவித்து வருகிறார். அவரது செயல்பாடுகள் இந்த முறையை கோப்பையை வெல்லும் தீவிரத்தை எதிரொலித்து வருகிறது.

தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆரம்பத்தில் வீரர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்பட்டாலும் ஆலோசனைகளை மேற்கொண்டு அதை குறைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் வீரர்களின் பயிற்சியில் தீவிரம் காணப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். வெறுமனே இரண்டரை மணிநேரங்கள் பயிற்சி செய்துவிட்டு சோர்வடைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில் விராட் கோரிக்கை

வீடியோவில் விராட் கோரிக்கை

பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடும் வீரர்கள் மிகுந்த செயல்திறனுடன் அதை மேற்கொள்ள வேண்டும் என்றும் விராட் அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை ஆர்சிபி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்கள் குறித்து அணியின் பௌலர் நவ்தீப் சைனியும் உற்சாகம் தெரிவித்துள்ளார். அணியின் மூத்த வீரர்கள் சிறப்பாக வழிகாட்டுவதாகவும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, September 6, 2020, 15:25 [IST]
Other articles published on Sep 6, 2020
English summary
Seniors have been telling us how to build the intensity gradually after such a long gap -Saini
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X