இர்பான் பதான் கைது.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
கபில்தேவ்க்கு பிறகு இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளங்கியவர் இர்பான் பதான்.

தற்போது காஷ்மீர் அணிக்கு மெண்டராக இருக்கும் அவர், சமீபத்தில் டிவிட்டரில மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்தியாவில் நடைபெறும் சில அரசியல் சம்பவங்களை கண்டித்தும் அவ்வப்போது டிவிட் போட்டு வந்தார். சமீபத்தில் கூட இர்பான் பதான் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சிக்கும் வகையில் டிவிட் போட, அதற்கு சக கிரிக்கெட் வீரர் அமித் மிஷ்ரா பதில் போட்டு, அது வைரலாக மாறியது.
இந்த நிலையில், டிவட்டரில் இர்பான் பதானை விடுதலை செய்யுங்கள் என்று ஹேஸ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதனால் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கைது செய்யப்பட்டதாக ரசிகர்கள் புரிந்து கொண்ட அதிர்ச்சி அடைந்தனர். மேலும் டிவிட்டரின் (Algothrim )ஆல்கோதரமும், அது விளையாட்டு என்ற தலைப்பில் Release Irfan Pathan என்ற ஹாஸ்டாக் டிரெண்ட் ஆனது.
ஆனால், அதன் பிறகு தான் தெரிந்தது அது ஓவியாஷியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் உத்திரப் பிரதேச நிர்வாகி இர்பான் பதான் என்பது. இருவருக்கும் ஒரே பெயர் என்பதால், குழப்பம் ஏற்பட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்டிங் களத்தில் குதித்தனர். கடைசியில் அது வேறு இர்பான் பதான் என்பதால், அதையே மீம்சாக போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications