Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நூற்றாண்டின் சிறந்த பந்து.. ஒரே பந்தால் உலக புகழ் பெற்ற வார்னே.. எப்படி நிகழ்ந்தது அந்த அதிசயம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே உயிரிழந்த செய்தி இன்னும் பல ரசிகர்களால் நம்ப முடியவில்லை.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil

இது பொய் செய்தி, புரளியாக இருக்க கூடாதா என பலரும் கடவுளிடம் வேண்டி இருப்பார்கள். ஆனால் வார்னே கிரிக்கெட்டிற்காக படைக்கப்பட்ட மேஜிசியன்.

கிரிக்கெட்டை உலகம் முழுவதும் தனது பந்துவீச்சு மூலம் உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி, கடவுளால் வழங்கப்பட்ட பணியை சிறப்பாகவே செய்தார்.

மாறிய மோகம்

மாறிய மோகம்

சுழற்பந்துவீச்சு என்பது கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் மிகவும் பிரபலம். ஆனால் காலம் மாற மாற, சுழற்பந்துவீச்சு மீதான மோகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மாற தொடங்கியது. அதற்கு காரணம், 1960, 70 களில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டாளம் தான். இதனால் சுழற்பந்துவீச்சை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

வார்னே மேஜிக்

வார்னே மேஜிக்

அப்படி ஒரு சூழலில் தான் கிரிக்கெட்டுக்கு வந்த வார்னே, மீண்டும் ரசிகர்களை சுழற்பந்துவீச்சு பக்கம் சாய்த்தார். வார்னே மட்டும் இல்லை என்றால் சுழற்பந்துவீச்சை யாரும் ஒரு கலையாக கற்று கூட இருக்க மாட்டார்கள். ஏனென்றால் 1993ஆம் ஆண்டு வார்னே அப்படி ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார்.

சிறந்த பந்து

சிறந்த பந்து

கிரிக்கெட் தொடங்கியதிலிருந்து 100 ஆண்டுகளில் இப்படி ஒரு பந்தை யாரும் வீசியதில்லை என்ற பெருமையை பெற்றது. 1993ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக் கெட்டிங்கிற்கு வார்னே வீசிய பந்து லேக் சைடில் WIDE போல் சென்று, அப்படியே திரும்பி 0ff stump-ஐ பதம் பார்த்தது. அப்படி ஒரு பந்தை அதுவரை யாரும் கனவில் கூட பார்த்து இல்லை.

திரும்பி பார்த்த உலகம்

திரும்பி பார்த்த உலகம்

தாம் எப்படி ஆட்டமிழந்தோம் என்பதை தெரியாமல், அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார் மைக் கெட்டிங். அந்த தொடரில் வார்னே 34 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன் பிறகு உலகமே வார்னேவை திரும்பி பார்த்தது. மற்ற பந்துவீச்சாளர்களும் இதனை காப்பி அடித்து வீச முயன்றார். ஆனால் வார்னே பக்கம் நெருங்க கூட முடியவில்லை. ஆனால் வார்னே 2005ஆம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் ஸ்டரஸ்க்கு அதே மாதிரி பந்தை வீசி ஆட்டமிழக்க வைத்தார். வார்னே மறைந்தாலும், அவருடைய நினைவுகள் , சாதனைகள் கிரிக்கெட் இருக்கும் வரை மறையாது.

Story first published: Saturday, March 5, 2022, 1:14 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+